கன்னட படங்களில் மட்டுமே நடிப்பேன், இயக்குவேன் – ’காந்தாரா’ ரிஷப் ஷெட்டி

காந்தாரா கடந்த வருடத்தில் பெரும் பாராட்டுகளை பெற்ற படம். இந்த படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்குனரும் ஆவார். காந்தாரா படத்தில் குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியலை அழகாக படமாக்கி இருப்பார் ரிஷப் ஷெட்டி. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் ரிஷப் ஷெட்டியை பாராட்டினார்கள்.

ரிஷப் ஷெட்டிக்கு சிறுவயதிலேயே நிறைய படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் மீதும் அவர் ஸ்டைல் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.ராஜ்குமார் கார்களை ஸ்டைலாக ஓட்டி வருவதை பார்த்த, ரிஷப் ஷெட்டி கார் ஓட்ட தெரிந்தால் போது ராஜ் குமார் போல ஸ்டாராகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

பிறகு, கல்லூரி வந்ததும் அந்த எண்ணங்கள் எல்லாம் மாறி இயக்குனராகலாம் என்று முடிவு செய்து உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அந்த சமயத்தில் ஏழு கடல் தாண்டி சைட் – A,Bயின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி உடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்குனராக அறிமுகமான ரிக்கி படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்தார்.

அடுத்தும் இருவரும் இணைந்து கிர்க் பார்ட்டி என்ற படத்தில் பணிபுரிந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. தான் இயக்கும் படங்களில் சிறு கதாபாத்திரங்களில், மட்டும் நடித்து வந்திருக்கிறார். பின் காந்தாரா படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என்ற முடிவினை எடுத்திருக்கிறார்.

நடிப்பது சரி வராது என்று ஒதுங்கி இருந்த ரிஷப் ஷெட்டி காந்தாராவிற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். காந்தாராபார்ட் -2 2024ல் வெளியாகிறது. இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் ரிஷப் ஷெட்டி.

அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்க மாட்டேன். கன்னட படங்களில் மட்டுமே நடிப்பேன், இயக்குவேன் என்று கூறியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. காந்தாரா படத்திற்கு எல்லா மொழி மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ரிஷப் ஷெட்டி இப்படி பேசியது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.