ஷாருக்கானின் டன்கி டீசர் ரிலீஸ்!.. 3 இடியட்ஸ் இயக்குநரின் அடுத்த தரமான சம்பவம் ரெடி!..

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்துள்ள டன்கி டீசரை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி வெளியிட்டுள்ளார்.

லியோ படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத்தை வைத்து முன்னா பாய் எம்பிபிஎஸ், முன்னா பாய் எம்பிபிஎஸ் 2, 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய இந்தியாவின் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் ஹிரானி இந்த முறை அமீர்கானை விட்டு விட்டு ஷாருக்கான் படத்தை இயக்கி உள்ளார்.

டிரிபிள் ட்ரீட் கொடுக்கும் ஷாருக்கான்

இந்த ஆண்டு ஏற்கனவே பதான் மற்றும் ஜவான்  என டபுள் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள ஷாருக்கான் அடுத்ததாக வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டன்கி படத்தையும் ரிலீஸ் செய்ய ரெடியாகி விட்டார்.

இந்நிலையில், இன்று வெளியான டீசரில் நடிகர் ஷாருக்கானின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பு என அனைத்துமே வித்தியாசமாகவும் இந்தி ரசிகர்கள் ரசிக்கும் படியும் அமைந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படங்களில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில், இந்த முறை அவருக்கு பதில் நடிகை டாப்ஸி ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் பாலிவுட் நடிகருமான விக்கி கவுஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டன்கி டீஸர் ரிலீஸ்

ஒரே ஆண்டில் அடுத்து அடுத்து மூன்று பெரிய படங்களை ஷாருக்கான் எப்படித்தான் ரிலீஸ் செய்கிறாரோ என்கிற கேள்வி உலகளவில் தற்போது எழுந்துள்ளது.

தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தவும் பாலிவுட் சினிமாவின் மார்க்கெட்டை உலகளவில் உயர்த்தவும் பாடுபட்டு வருகிறார். டைகர் 3 படத்தில் ஷாருக்கான் கேமியோ இருந்தால் இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 4 படங்கள் வெளியாகிறது என்பது ரசிகர்களுக்கு வேறலெவல் ட்ரீட்டாகவே அமைந்து விடும்.

பதான் மற்றும் ஜவான் படங்களை போல இந்த படம் பான் இந்தியா படமாக வருகிறதா? அல்லது வெறும் இந்தி படமாக வருகிறதா என தெரியவில்லை. இன்று வெறும் இந்தி டீசர் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வழக்கம் போல அவரை காண மும்பையில் உள்ள மன்னாட் குடியிருப்புக்கு அருகே கூட தொடங்கி உள்ளனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews