லால் சலாம் விமர்சனம்.. மாஸ் காட்டும் மொய்தீன் பாய்.. இயக்குநராக பாஸ் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

அந்த படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. இதற்கு நடுவே லைகா தயாரிப்பில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

லால் சலாம் விமர்சனம்:

ரோகிணி தியேட்டரில் பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். விஷ்ணு விஷால் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் தியேட்டருக்கு வந்து ரஜினிகாந்தின் டைட்டில் கார்டு போட்டதில் இருந்து விசில் அடித்து பார்த்து ரசித்தார்.

தனுஷின் 3 மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தனது அப்பா ரஜினிகாந்தை இயக்கி உள்ளார் இந்த படத்தில்.

லால் சலாம் என்றாலே புரட்சிக்கான வணக்கம் என்று பொருள் என ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் சொல்லியிருந்தார். படத்தின் ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக அவரது காட்சிகளை வைத்து படத்தை ஆரம்பித்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

விக்ராந்த் மொய்தீன் பாயான ரஜினிகாந்தின் மகனாகவும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என பயிற்சி பெறும் கிரிக்கெட் வீரராகவும் வருகிறார். உள்ளூர் அணியான 3 ஸ்டார் அணிக்காக 3 படத்தை குறிக்கும் விதமாக ஐஸ்வர்யா வைத்திருக்கிறார் என்றே தெரிகிறது. அந்த அணிக்காக விஷ்ணு விஷால் விளையாடி வெற்றி பெற்று வருகிறார்.

ஒரு கட்டத்தில் சிலர் பேச்சைக் கேட்டு இன்னொரு அணிக்கு தாவி விடுகிறார். அதன் பின்னர் 3ஸ்டார் அணி தோல்வியை தழுவுகிறது. அந்த அணியை காப்பாற்ற மும்பையில் டானாக இருக்கும் மொய்தீன் பாயின் மகன் விக்ராந்தை அழைக்கின்றனர். அவர் இந்த அணிக்காக விளையாட ஆரம்பித்து வெற்றி பெறுகிறார்.

விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் மோதல் வெடிக்கிறது. வேறு வேறு மதத்தினர் என்பதால், இவர்களின் பிரச்சனை எப்படி ஊர் பிரச்சனையாக மாறுகிறது. அதனை கிளைமேக்ஸில் மொய்தீன் பாய் தீர்த்து வைக்க என்ன செய்தார் என்பது தான் இந்த லால் சலாம் படத்தின் மொத்த கதையே.. ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு கொடுத்த வேலையை எக்ஸ்ட்ரா உழைப்பு போடாமல் தேவையான மீட்டரில் கொடுத்திருக்கிறார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா, லிவிங்ஸ்டன், தன்யா பாலகிருஷ்ணா அனந்திகா என அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்துள்ளனர்.

தேர் திருவிழா படத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. வெளியூர்களுக்கு செல்பவர்கள் எல்லாம் அந்த 2 நாள் தான் ஊருக்கு வருவார்கள். பேரப்பிள்ளைகளை அப்போது தான் கொஞ்ச முடியும் என செந்தில் வருத்தப்படுவது.

கடவுளை அடையத்தான் மதம் உருவானதே தவிர மனிதர்கள் சண்டை போட்டுக் கொள்ள எந்த மதமும் உருவாகவில்லை போன்ற மதநல்லிணக்க வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.

லால் சலாம் – சல்யூட்!

ரேட்டிங் – 3.5/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.