உலக நாயகன் மேல இப்படி ஒரு மரியாதையா.. ரஜினிக்கு போன் செய்த கமல்.. மறுகணமே சூப்பர்ஸ்டார் செஞ்ச விஷயம்..

பொதுவாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி இருப்பதாக ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் இருப்பதுடன் அவர்களது ரசிகர்கள் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கருத்துக்களையும் தெரிவித்து வருவார்கள். ரஜினி – கமல், விஜய் – அஜித், சூர்யா – விக்ரம், சிம்பு – தனுஷ், சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என இந்த தலைமுறை நடிகர்கள் வரை இப்படியான ஒரு போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் ரசிகர்களுக்கு இடையே திரைப்படம் வெளியாகும் போது போட்டி இருந்தாலும் அவர்கள் இருவரும் மிகவும் நண்பர்களாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அண்ணன் தம்பி போல தான் இத்தனை ஆண்டுகள் பழகி வருகின்றனர். சக நடிகர்களாக மாறி மாறி இருவரின் திரைப்படங்களை பாராட்டி வருவதுடன் தமிழ் சினிமாவில் இப்படி இரண்டு நடிகர்கள் நட்பின் இலக்கணமாக இருக்கவே முடியாது என்று அளவிற்கு அன்பு காட்டியும் வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினி – கமல் ஆகியோரின் நட்பு பற்றி இருவருக்கும் இடையே உள்ள புரிதல் தொடர்பாக நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் இளவரசு தெரிவித்துள்ள சில கருத்துக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அவர் தெரிவித்த கருத்தின் படி, ரஜினி நடித்த லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருந்துள்ளது. அந்த சமயத்தில் கோச்சடையான் படத்தை பார்ப்பது பற்றி கமல், ரஜினிகாந்தை அழைத்துள்ளார். நடிகர் இளவரசு உள்ளிட்ட சிலர் படப்பிடிப்பு தளத்தில் இருக்க, கால் மேல் கால் போட்டு கொண்டு ரஜினி சேர் ஒன்றில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கமல் அழைப்பதாக சுப்பையா என்ற நபர் ரஜினியிடம் தெரிவித்ததும் மறுகணமே ஒரு காலை கீழே போட்டுவிட்டு தொலைபேசியை வாங்கி மிகவும் பணிவாக பேசியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மேலும், தான் மைசூரில் இருப்பதாகவும் கோச்சடையான் படத்தை தனியாக பார்க்கும்படியும் கமலிடம் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதன் பின்னர் கமல் போன் வைத்த பிறகு தான், மீண்டும் கால் மேல் கால் போட்டுக் கொண்டாராம் ரஜினிகாந்த். இந்த பணிவை பார்த்ததும் நடிகர் இளவரசு மற்றும் அங்கிருந்தவர்கள் வியந்து போயினர். ரஜினிகாந்த் கொடுத்த மரியாதையை கமல் பார்க்க போவதே இல்லை என்ற போதிலும், ரஜினியின் இந்த செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது பற்றி இளவரசு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில், இதனை அறிந்த ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் அனைவருமே மனம் நெகிழ்ந்தும் போயுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...