நோ சொன்ன ரஜினி.. இருந்தும் 15 நிமிடங்களில் ரெடியான பாட்ஷா படப் பாடல்…

சினிமாவில் உடைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக ரஜினியை மாற்றிய படம் என்றால் அது பாட்ஷாதான். அதற்கு முன்னர் ரஜினி என்பவரை வெறும் நடிகராக மட்டுமே பார்த்தவர்கள் பாட்ஷா படத்திற்குப் பின் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவே ரஜினியை மாற்றி விட்டார்கள். ரஜினி என்ற ஒரு இமாலாய நடிகரை வைத்து கோடிகளில் பணத்தைக் கொட்டி தயாரிப்பாளர்கள் படத்தை எடுத்து அதன் மூலம் நல்ல லாபம் பார்த்தனர். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் மினி தொழிலதிபராகவே மாறிவிட்டார் எனலாம்.

இந்த விஷயத்துல ஒண்ணா சேர்ந்த அமீர், தங்கர் பச்சான்..நல்லது நடந்தா சரி..!

ஒரே ஒரு டான் கதை ஒட்டுமொத்த சினிமா உலகையும் புரட்டி அதுவரை வசூலில் சாதனை படைத்த படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சக்கைப் போடு போட்டது பாட்ஷா. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் படத்தில் ரஜினியின் நண்பனாக வரும் அன்வர் பாட்ஷா பெயர் தான் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கும். ரஜினி பெயர் மாணிக்கம் என்று இருக்கும். ரகுவரனின் வில்லத்தனமும், ரஜினியின் ஆக்சனும் படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கும்.

தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. இன்றும் ஆட்டோக்காரன் பாடல் ஆயுத பூஜை அன்று ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே இல்லை. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அழகு, நீ நடந்தால் நடை அழகு என்ற பாடலை முதலில் ரஜினி வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால் ஆடியோ கேசட்டில் மட்டும் வைக்கலாம் என்று யோசனை கூறியிருக்கிறார்.

பின்னர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியிடம் இந்தப் பாடலின் முக்கியத்துவத்தையும், பாடல் எடுக்கப் போகும் விதமான ஹீரோயின் பார்க்கும் முகமெல்லாம் ஹீரோ ஞாபகமே வரவேண்டும் என்பதற்காக ஜிம்முக்குப் போகும் ஹீரோயின் பார்க்கும் மிஷின்களிலெல்லாம் ஹீரோ முகம், மேலும் ரிஷப்சனிஸ்ட்டும் ஹீரோதான் என்று கூற, ரஜினி அதை டெவலப் செய்து கண்டக்டர், டிராபிக் போலீஸ், ரவுடி, அய்யர் என 15 கெட்டப்புகளில் பாடல் எடுக்கலாம் என யோசனை கூறினாராம்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தவறாக சீன் எடுத்த பாரதிராஜா.. மூடி மறைத்து ஹிட் கொடுத்த ரகசியம்

சுரேஷ் கிருஷ்ணாவிற்கும் இந்த யோசனை சரியென்று பட அடுத்த 15 நிமிடங்களில் இப்பாடலைப் படமாக்கினார்களாம். சொன்னது போலவே பாடல் ஹிட் ஆனது. தேவாவின் இன்னிசையில் சித்ரா இப்பாடலைப் பாடியிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews