6 மாதமாக சர்ச்சையில் சிக்கிய கமல் பாடல்… முற்றுப்புள்ளி வைத்து முடித்த வைரமுத்து.. அந்தப் பாட்டு இதானா?

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 1981-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராஜ பார்வை. பார்வையற்றவராக கமல், மாதவி ஆகியோர் நடித்திருந்த இப்படம் கண்பார்வையற்ற ஒருவனின் காதல் கொண்டால் அது எப்படி இருக்கும் என்று உருவாக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இளையராஜாவின் இசையில் பாடல்களும் ஹிட் ஆகின.

இந்தத் திரைபபடத்தில் இன்றளவும் நாம் கேட்டு ரசிக்கும் ஒரு பாடல் தான் அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது என்ற பாடல். வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்தப் பாடல் அப்போது நிறைய சர்ச்சைகளைச் சந்தித்தது. அதவாது கதைப்படி பார்வையற்ற இளைஞனுக்கு வரும் காதலால் காதலியை வர்ணிக்கிறான். ஆனால் பாடலில் அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது என்று எழுதப்பட்டிருக்கும்.

பார்வையற்ற ஒருவன் எப்படி உன்முகம் தெரிகிறது என்று பாடுவார் இது பாடல் விதிகளுக்கு முரணாக உள்ளது. மேலும் காட்சிக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போன்ற சர்ச்சைக் கருத்துகள் உலவின. இதற்கு பதில் கொடுக்கும் விதமாக வைரமுத்து கதைப்படி ராஜபார்வை படத்தில் கமல் ஒரு வயலின் கலைஞர். அப்படி ஒருநாள் நிஜத்தில் ஒரு ஸ்டுடியோவில் ஒரு பாடலுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் உருவாகும் வேறு ஒரு படத்திற்கான பாடலுக்கான பதிவில் கமல் வயலின் இசைப்பார்.

இவரு போய் என்னோட காலைப் பிடிப்பதா? இயக்குநரிடம் வாக்குவாதம் செய்த விஜயகாந்த்.. இருந்தும் அப்படியே படமாக்கப்பட்ட காட்சி..

இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பாடல் எழுதப்பட்டது. அது கமலுக்காக எழுதப்பட்டது அல்ல என்று விளக்கம் கொடுத்தார். மேலும் இந்தப் பாடலில் முதலில் அந்தி மழை என்பதற்குப் பதிலாக திராட்சை ரசம் பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என முதலில்திராட்சை ரசம் என்ற வரிகளை எழுதியிருக்கிறார்.

அது சரியாக வராமல் போகவே பின்னர் அந்திமழை என்ற வார்த்தையைப் போட அனைவருக்கும் பிடித்து விட அதை வைத்தே பாடலை இயற்றியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. மேலும் இந்தப் படத்தில் உருவான அழகே.. அழகு தேவதை என்ற பாடலும் கங்கை அமரன் வரிகளில் மெலடியில் ரசிகர்களை வருடியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews