இப்படியா போஸ்ட் போடுவீங்க..? பிரியா பவானி சங்கரை கலாய்த்த நண்பர்கள்

நடிகர்கள் ஷாரூக்கான், மாதவன், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து சாதித்த ஹீரோக்கள் ஏராளம். பெரும்பாலும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத் திரைக்குள் நுழைவார்கள். ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிர்ஷ்டமும் திறமையும் மட்டுமே வேண்டும்.

ஹீரோக்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் ஹீரோயின்கள் ஆவது அவ்வளவு சுலபமல்ல. இதையெல்லாம் தகர்த்து செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து தனது அழகாலும் நடிப்பாற்றலாலும் வெள்ளித்திரையில் நுழைந்தவர்தான் பிரியா பவானி சங்கர்.

ஸ்டார் விஜய்-ல் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் இவரை வெள்ளித் திரைக்குள் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் சில  படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னர் ஹீரோயினாக வலம் வரத் தொடங்கினார்.  மேயாத மான் படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

திமிராக போட்ட பதிவு

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் கூறியதாவது

”நான் எனது கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் வரன் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். திருமண வரன் இணையதளத்தில் என்னுடைய அழகான புகைப்படத்தை பதிவேற்றி கீழே என்னுடைய எதிர்ப்பார்ப்பினை தெரிவித்தேன். ஆனால் அப்போது பக்குவப் படாத வயது என்பதால் என்ன கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் கொடுத்த போது அதை பார்த்த நண்பர்கள் இந்த மாதிரி நீ கொடுத்தா ஒருத்தனும் கல்யாணம் முடிக்க வர மாட்டான் என்று கலாய்த்தார்கள்.

என்னுடைய சுதந்திரத்திற்கு யாரும் இடையில் யாரும் வரக்கூடாது என்று திமிராக அந்த இணையதளத்தில் பதிவேற்றி இருந்தேன். ஆனால் இன்று அப்படியில்லை“ இவ்வாறு அந்த பேட்டியில் பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார். இவரின் இந்த பேட்டியை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.

தற்போது பிரியா பவானி  சங்கர் உலக நாயகனுடன் இந்தியன் 2 படத்திலும், டிமாண்ட்டி காலனி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews