சலார் விமர்சனம்: பாவம் பிரபாஸை வச்சு எல்லாரும் இப்படி பழிவாங்குறாங்களே!

சலார் விமர்சனம்:

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த எல்லா படங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாகவும் படம் பிரம்மாண்டமாகவும் இருந்தாலும் கொஞ்சம் கூட ரசிகர்களை கவரும் அளவுக்கு இயக்குனர்கள் தொடர்ந்து பிரபாஸுக்கு துரோகம் செய்வது ஏன் என்கிற கேள்விதான் இன்று வெளியான பிரம்மாண்ட சலார் பரம்பரை பாகுபலி சிலை போல எழுந்து உயரமாக நிற்கிறது.

சலார் படத்தில் கான்சார் எனும் ஹிடன் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருந்தாலும், அங்கே காட்டப்படும் மக்கள் எல்லாமே காட்டுவாசிகளை போல இருப்பது ஏன் என்கிற கேள்வியும், ஸ்ருதிஹாசனை தவிர மொத்த படக்குழுவுக்கு கருப்பு மேக்கப் போட்டு விட்டார்களே ஏன் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பாவம் பிரபாஸ்:

ஆரம்பத்தில் பிரபாஸை அமைதியாக காட்டும்போதே இவன் அமைதியானவன் தான் இவனால் எதுவும் செய்ய முடியாது என்கிற ஃபீலிங் வர வேண்டும். பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மாணிக்கமாக காட்டும் போது ரசிகர்கள் நம்பும் படியாகவே இருந்தது. அவரைக் கட்டி வைத்து உதைக்கும் போதும் அந்த டோன் மெயின்டெயின் ஆனது. எப்போது அவர் பாட்ஷாவாக உருமாறுகிறாரோ அப்போது தான் ஃபயர் கிளம்பியது.

ஆனால், இங்கே ஆரம்பத்திலேயே பிரபாஸ் எப்படியாப்பட்ட பைத்தியக்காரன் என்பதை காட்டி விடுகின்றனர். அதன் பின்னர் ஸ்ருதிஹாசனை காப்பாற்ற அவரிடம் வான்டட்டாக அனுப்பி வைக்கும் போதும் எந்தவொரு சர்ப்ரைஸும் இல்லை. அம்மா கேரக்டரில் ஈஸ்வரி ராவ் செய்வது எல்லாமே ஓவர் ஆக்டிங் கிரிஞ்சாகவே தான் உள்ளது.

எதுவுமே எடுபடல:

பிறந்தநாள் கத்தியைக் கூடத் தொடக் கூடாது என வரும் பில்டப் எல்லாம் யப்பா சாமி முடியலைப்பா என்கிற ரகம் தான். அந்த காட்சியே கிரிஞ்ச் என்றாலும் அதை மீண்டும் ஸ்ருதிஹாசன் நினைவுப்படுத்தி பேசும் இடமும் ஸ்ருதிஹாசனுக்கு இந்த மொத்த கதையையும் மைம் கோபி சொல்லும் இடங்கள் எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்.

படம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் இந்தக் கதையை பிரபாஸ் சொல்லவில்லை இது மயங்கும் கோபியின் பெர்சப்ஷன் தான் லியோ படத்தின் ஃபேக் ஃபிளாஷ்பேக் உருட்டுக்கே சென்று விட்டனர்.

பிருத்விராஜ் நல்லவரா? கெட்டவரா? என கடைசி வரை காட்டாமலே அடுத்த பாகத்துக்கு வாங்க இன்னும் வச்சு செய்றோம் என அழைப்பதெல்லாம் டூமச்!

சலார் – பளார்!

ரேட்டிங் – 2.5/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.