தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் – 2024… வட்டி விகிதம் மற்றும் முக்கிய அம்சங்கள் இதோ…

தபால் நிலையங்களில் முதலீடு செய்வதன் மூலம் மக்களுக்கு அதிக வட்டி விகிதம் கிடைப்பதுடன், பணத்திற்கு பாதுகாப்பும், 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. குறைந்த தொகையிலிருந்து திட்டங்கள் இருப்பதால் சாதாரண மக்களுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி மூத்தக் குடிமக்களுக்கான அதிகபட்ச வைப்புத் தொகை 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருக்கிறது. மாதாந்திர சேமிப்பு திட்டங்களின் வைப்புத் தொகை தனி நபர் கணக்கிற்கு 4.5 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்குகளில் 9 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருக்கிறது. மூத்தக் குடிமக்களுக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது.

ஒரு தனி நபரின் சேமிப்பு கணக்கில் வைக்கவேண்டிய குறைந்தபட்ச வைப்புத் தொகை 500 ரூபாய் ஆகும். உள்நாட்டு வாடிக்கையாளர்கள் தனியாக அல்லது கூட்டு உரிமையில் கணக்கைத் தொடங்கலாம். வைப்புத் தொகைக்கு 4 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.

ஒருவர் 5 வருடங்களுக்கு தொடர் வைப்புத் தொகையை ஆர்.டி திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதற்கு வட்டி விகிதமாக 6.7 சதவீதம் வழங்கப்படுகிறது. 12 தவணைகள் காட்டிய பிறகு டெபாசிட் தொகையிலிருந்து 50 சதவீதத்தை லோனாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் என நேர கணக்கில் வைப்புத் தொகையை டெபாசிட் செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு- 6.9 சதவீதம், 2 வருடத்திற்கு- 7சதவீதம், 3 வருடத்திற்கு- 7.1 சதவீதம் மற்றும் 5 வருடங்களுக்கு- 7.5 சதவீதம் வட்டியாக வழங்கப்படுகிறது.

15 வருட போது வருங்கால வைப்புத் தொகை கணக்கும் தபால் அலுவலகத்தில் செயல்முறையில் உள்ளது. மாத சம்பளம் வாங்கும் தனிநபர்கள் இந்த திட்டத்தை முதலீடாகவும் ஓய்வூதியமாகவும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகையும் கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். இது போன்ற பல திட்டங்கள் தபால் அலுவலங்களில் இருக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...