உங்க அப்பா முன்னாடி அப்படி நடந்துக்கோங்க.. விஜய்யின் ஆணவம்.. சீண்டிய பிரபல இயக்குனர்..

நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரன். இவர் இயக்கியது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான திரைப்படங்களாக இருந்தாலும் அந்த சில படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதையும் மிக அதிகமாக கவர்ந்திருந்தது.

இவர் திரைப்பட நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் மிக மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். ராஜகுமாரன் கடைசியாக இயக்கிய திரைப்படமான திருமதி தமிழ் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்ததுடன் மனைவி தேவயானியும் அவருடன் இணைந்து நடித்திருந்தார். இது தவிர சந்தானம் நடிப்பில் உருவாகியிருந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி கதாபாத்திரத்திலும் ராஜகுமாரன் நடித்து அசத்தியிருப்பார். இந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே நேர் மாறாக ‘கடுகு’ என்ற திரைப்படத்தில் எமோஷனல் கலந்த முன்னணி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்ததும் பலதரப்பிலான மக்களின் பாராட்டுகளையும் பெற்று கொடுத்திருந்தது.

சிறந்த இயக்குனராக ராஜகுமாரன் இருந்தபோதிலும், சமீப காலங்களில் மிக பிரபல நடிகர்கள் பற்றி அவர் பேசி இருந்த சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சைகளைத் தான் ஏற்படுத்தி இருந்தது. பிரபல நடிகர் சியான் விக்ரம் குறித்து பேசி இருந்த ராஜகுமாரன், தன்னுடைய படத்திலும் விக்ரம் சரியாக நடிக்கவில்லை என்றும், அவர் ஒரு சிறந்த நடிகரே இல்லை என்பது போன்ற விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.
Thirumathi Thamizh on Moviebuff.com

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பு குறித்து ராஜகுமாரன் பேசிய சில கருத்துக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் அவர் மீது அதிகம் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்த இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன், விஜய் சிறந்த நடிகர் எல்லாம் கிடையாது என்றும் அவர் தப்பு தப்பாக நடித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் மட்டுமே சிறப்பாக நடித்திருந்ததாக குறிப்பிடும் ராஜகுமாரன், அந்த படத்தில் அப்பா கேரக்டர் கதாபாத்திரத்தை எதிர்த்து விஜய் ஆணவத்துடன் பேசும் வசனங்கள் சரியாக இல்லை என்று கூறியதுடன் அவரைப் பின்பற்றும் பல ரசிகர்கள் கூட தந்தையிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று ஒரு குற்றச்சாட்டையும் ராஜகுமாரன் முன் வைத்திருந்தார்.

திரைப்படமாக இருந்தாலும் தந்தையை எதிர்த்து அப்படி பேசக்கூடாது என்றும் உங்கள் தந்தையிடம் வேண்டுமானால் பேசிக் கொள்ளலாம் என்றும் ராஜகுமாரன் பேசிய வீடியோக்களை தற்போது ரசிகர்கள் அதிக அளவில் வைரலாக்கி இது பற்றி தங்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.