மாதம் ரூ.10000 செலுத்தினால் ரூ.7 லட்சமாக திரும்ப கிடைக்கும் போஸ்ட் ஆபிஸின் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்வதை விரும்பி பல திட்டங்களில் இணைந்து வருகின்றனர். போஸ்ட் ஆபிஸில் பல திட்டங்கள் பிரபலமானவை. அதில் தொடர் வைப்புத் தொகை திட்டங்கள் மிக முக்கியமானது. நமது பணத்திற்கு பாதுகாப்புடன் நல்ல வட்டி விகிதத்தையும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வழங்குகிறது.

அதிக வட்டி விகிதம் கொண்ட திட்டங்களை தேர்வு செய்வது லாபமாக இருக்கும். நடுத்தர மக்களின் வாழ்க்கையை உயர்த்தவே ஆர்டி மற்றும் தொடர் வைப்பு தொகை திட்டங்களை அஞ்சல் துறை அறிமுகப் படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நிதி அமைச்சகம் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் 30 புள்ளிகளை அதிகரித்து உள்ளது. இதனால் தொடர் வைப்புத் தொகையின் வட்டி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் போஸ்ட் ஆபிஸ் கணக்கில் தொடர் வைப்பு தொகையாக மாதம்தோறும் ரூ. 10,000 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கால அளவானது ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த ஐந்து ஆண்டுகளின் நிறைவில் நீங்கள் செலுத்தியிருந்த ரூ. 6,00,000 பணத்துடன் வட்டியாக ரூ. 1,10,000 சேர்த்து ரூ. 7,10,000 பணமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்திதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. அப்படி செய்வதன் மூலம் பத்து ஆண்டுகளின் இறுதியில் ரூ. 16,60,000 ஆக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைந்த பிறகு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் வைப்புத் தொகையை செலுத்தி விட வேண்டும். முதலீட்டாளர்கள் 12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு லோன் பெரும் வசதியும் இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...