விஜய் அவர்களுடன் இணைந்து நடனமாட 200% எனது முழு உழைப்பை தர வேண்டியிருந்தது… ஷாஜஹான் பட நடிகை ரிச்சா பகிர்வு…

ரிச்சா பலோட் இந்தியத் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக ‘லம்மே’ என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ‘நுவ்வே கவாளி’ என்ற தெலுங்குப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகமான ரிச்சா பலோட், 2001 ஆம் ஆண்டு ‘ஷாஜஹான்’ திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.

முதல் திரைப்படமே ரிச்சா பல்லோட் அவர்களுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ‘ஷாஜஹான்’ திரைப்படம் வெற்றிப் பெற்று விஜய் அவர்களின் கேரியரில் முக்கியமான படமாக இடம்பெற்றது. இப்படத்தின் பாடல்களும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து ரிச்சா பல்லோட் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘அல்லு அர்ஜுனா’, 2003 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கிறுக்கன்’, 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ரிச்சா பல்லோட், ஷாஜஹான் திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், விஜய் அவர்கள் சூப்பர் பெர்ஃபாமர், டான்ஸ் அப்படி ஆடுவார், அவருடன் நடனமாட வேண்டும், பாடல் ஷூட்டிங் என்றால் அவருக்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்க்கு போய் டான்ஸ் மொவ்மென்ட்ஸை பயிற்சி எடுத்துக் கொள்வேன். அவருடன் இணைந்து நடனமாட வேண்டும் என்றால் எனது 200% முழு உழைப்பை தர வேண்டியிருந்தது என்று பகிர்ந்துள்ளார் ரிச்சா பல்லோட்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...