ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சர்வதேச டென்னிஸ் வீராங்கனை ஓய்வு..!!

தற்போது விளையாட்டு உலகில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

இந்த நிலையில் மற்றுமொரு வீராங்கனை ஓய்வினை அறிவித்துள்ளதாக தெரிகிறது. இவர் டென்னிஸ் வீராங்கனை ஆவார். அதன்படி 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற டென்னிஸ் வீராங்கனை மோனிகா ஓய்வினை அறிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 28 வயதான மோனிகா சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள தன்னாட்சி பெற்ற பியூர்டோ ரிகோ பிரதேசத்தை சேர்ந்தவர் டென்னிஸ் வீரர் மோனிகா.

பியூர்டோ ரிகோ  பிரதேசத்திலிருந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை மோனிகா ஆவார். காயங்கள் மற்றும் 4 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட நிலையில் ஓய்வு பெறுவதாக மோனிகா அறிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.