50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த ரியல் கணவன்-மனைவி… 50 வருடங்களில் 1200 படங்களுக்கு மேல் நடித்த சாதனைக்காரர்!

காமெடி நடிகர்களால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்து அதற்கு முதல் காரணமாக விளங்கியவர்தான் தங்கவேலு. நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் ஹீரோவாகவும் ஜொலித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.

நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தங்கவேலு. இன்று வடிவேலுவின் வசனங்கள் மீம்ஸ்களில் கலக்குவதுபோல அன்று திண்ணை, டீக்கடை என அனைத்திலும் தங்கவேலுவின் வசனங்கள் தான் நிறைந்திருந்தன என்றால் அவரை புகழின் பெருமையை அறியலாம்.

தன் பத்தாவது வயதில் குடும்ப கஷ்டம் காரணமாக யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக்குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். மேலும் பல நாடகக் குழுவில் நடித்து பின் தன்னுடைய நண்பரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில நடித்தார்.

இருந்தாலும் இப்படி ஒரு திமிரா…! எந்த விருதும் வேண்டாம்.. வெற்றி விழாவும் வேண்டாம்.. எம்.ஆர்.ராதாவின் சீரியஸ் பக்கங்கள்

என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பி போல பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகம் தான் ‘சதிலீலாவதி’ படமாகத் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அறிமுகமான அதே படத்தில் தான் தங்கவேலுவும் திரை உலகில் அறிமுகமானார் தங்கவேல். ஆனால் அதன் பிறகு 15 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

பின் டி.ஆர்.ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த “சிங்காரி” திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக தனக்குத் தனி இடத்தை உருவாக்கினார். இந்த படத்தில் பல இடங்களில் டணால் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் கிடைத்த அடைமொழியே “டணால் தங்கவேலு” என்பதாகும். அதன் பின் அமரகவி, பணம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார்.

இவரது கதாபாத்திரங்களில் குறிப்பிடத்தக்கது கல்யாணப்பரிசு திரைப்படம். இப்படத்தில் வரும் மன்னாரன் கம்பெனி மேனேஜர் காமெடி இன்றும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த பத்து காமெடிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கல்யாணப் பரிசு திரைப்படம் இவரது திரை வாழ்வில் மட்டுமின்றி இல்லற வாழ்க்கைக்கும் வித்திட்டது. ஏனென்றால், அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை எம். சரோஜாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஜோடியாக 50 படங்களில் நடித்துள்ளார்கள்.

தன்னுடைய 50 வருட திரைப் பயணத்தில் சுமார் 1275- படங்களுக்குமேல் நடித்துள்ள தங்கவேலு 1968-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றார். பின் 1989 இல் கலைவாணர் விருது பெற்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...