தனுஷ் தான் அந்த ஏமாற்றத்துக்கு காரணம்?.. நமிதாவின் மனசே நொறுங்கிப்போச்சாம்.. ஓப்பன் பேட்டி!..

தென்னிந்தியத் திரைப்பட உலகில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்துக்கொண்டிருந்த நமிதா சில ஆண்டுகளுக்கு பின் தற்போது அளித்திருந்த பேட்டியில் தன் வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

நமிதா பேட்டி:

2001ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற நமிதா 2002ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், எங்கள் அண்ணா படத்தில் கேப்டன் விஜய்காந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், மிக கவர்ச்சியாக நடித்து வந்த நமிதா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், பெரும்பாலும் நமிதா மூத்த நடிகர்களான சரத்குமார், சத்யராஜ், சுந்தர். சி உள்ளிட்டோர்களுடன் நடித்து வந்ததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. கதாநாயகியாக நடித்து வந்த நமிதா அழகிய தமிழ் மகன், பில்லா, வியாபாரி, போன்ற படங்களில் கிளாமர் நடிகையாக மாறினார்.

அதை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய நமிதா அதிமுகவில் இணைந்தார். பின்பு 2020ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து மாநிலச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்துக்கொண்டார்.

சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த நமிதா விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். மேலும், ஓவியாவிற்கும் நமிதாவிற்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு அதிலும் தோல்வியைத் தழுவினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நமிதா தொழிலதிபரான வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் எளிமையான முறையில் நடைபெற்றது. தனது 41வது வயதில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

தனுஷ் ஹீரோன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க:

மேலும், தற்போது நமிதா அளித்திருந்த பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார், 2006ம் ஆண்டு ஒரு படத்தில் தனுஷ் ஹிரோவாக நடிக்கிறார் எனக் கூறி தன் உறவினரை ஹீரோவாக நடிக்க வைத்து எமாற்றி விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் அதன் பின் படத்திலிருந்து பாதியிலேயே விலகி விட்டேன் பின்னர் எப்படியோ அப்படத்தை முடித்து ரீலிஸ் செய்தனர் என தனக்கு சினிமாவில் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்திலும் அவர் புகார் அளித்திருந்ததாக கூறியுள்ளார்.

நமிதா 2006-ஆம் ஆண்டு தகப்பன் சாமி, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, மற்றும் நீ வேணும்டா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், “நீ வேணும்டா செல்லம் படத்தில் தான் தயாரிப்பாளரின் மகன் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தை பற்றித்தான் நமிதா சொல்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews