மாரிமுத்துவின் ஆசை.. நெகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அஜித்!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வெள்ளி திரை முதல் சின்னத்திரை வரை அனைத்திலும் கலக்கி கொண்டிருந்தவர் மாரிமுத்து. இந்நிலையில் இன்று காலை அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தான் அவர் மாரடைப்பால் காலமானது உறுதியானது.

மாரிமுத்து சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர். மாரிமுத்து அவர்கள் சிறு வயதில் இருந்தே சென்னைக்கு போக வேண்டும், இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் இயக்கிய படம் அவர் சொந்த ஊர் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்று ஆசை கொண்டார்.

இந்த ஆசை காரணமாக கவிஞர் வைரமுத்துவிடம் முதலில் உதவி எழுத்தாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதை தொடர்ந்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ஆசை படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார். இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், ராஜ்கிரண் இயக்கிய அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் இந்த படங்களிலும் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்தினம், சீமான் போன்ற பிரபல முன்னணி இயக்குனருடன் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

இறுதியாக எஸ். ஜே சூர்யா இயக்கிய வாலி, குஷி படத்திலும் மாரிமுத்து அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார். அடுத்ததாக பிரசன்னாவை ஹீரோவாக வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கண்ணும் கண்ணும் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது 4 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

அடுத்த நடிகர் விமல் ஹீரோவாக வைத்து புலிவால் என்ற படத்தை மாரிமுத்து இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ஏழு கோடியே இருபது லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரிமுத்துவின் சினிமா தொடக்க காலத்தில் உதவி இயக்குனராக அஜித்துடன் பல படங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கும் அஜித்துக்கும் உள்ள நெருக்கத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் மாரி முத்து கூறியுள்ளார்.

அதில் அஜித் தனக்கு பெரிய உதவி செய்ததாகவும், அஜித் தன் மேல் மிகவும் பிரியமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். சமீப காலமாக அஜித்துடன் தொடர்பு இல்லை என்றும் அடுத்து அவருடைய படத்தில் நடிக்க போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியன்- 2 படத்திற்கு ஆப்பு வைத்த அட்லி!

மேலும் ஆசை படப்பிடிப்பின் போது மாரிமுத்துவிற்கு திருமணமாகி மகன் பிறந்திருக்கிறான், அப்போது தனது மகனை பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார் மாரிமுத்து. ஆனால் அந்த பள்ளியில் படிக்க பெரிய தொகை முன் பணமாக கட்ட வேண்டியதாக இருந்துள்ளது.

இந்த நிலைமையை ஒரு நாள் ஆசை படப்பிடிப்பின் போது மாரிமுத்து அஜித் அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு உடனே அஜித் அவரது உதவியாளரை அழைத்து மாரிமுத்துவின் மகனின் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவி செய்யுமாறு கூறினார். அதன் பின் தான் அஜித்துடன் எந்த உதவியும் கேட்க வில்லை என மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews