கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் டீம்!.. இதுதான் ரியல் வெற்றி!

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆண்டு கேரளா சினிமாவுக்கு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக ரிலீசாகி வருகின்றன.

இந்த மாதம் தொடக்கத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் காதலர் தினத்தை டார்கெட் செய்து வெளியானது. மமிதா பைஜு நடிப்பில் வெளியான அந்த படம் 70 கோடி வசூலை உலக அளவில் எட்டியுள்ளது.

GHb9XSRXYAAiPYV

கமல்ஹாசனை சந்தித்த மஞ்சுமல் பாய்ஸ்:

அடுத்து ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை 10 நாட்களில் கடந்து சக்கை போடு போட்டு வருகிறது. மலையாளத் திரைப்படங்கள் பொதுவாக 10 முதல் 20 கோடி ரூபாய்க்குள் எடுக்கப்பட்டு 50 கோடி முதல் 100 கோடி என மிகப்பெரிய வசூல்வேட்டையை ருசித்து வருகின்றன.

பிரேமலு மற்றும் பிரமயுகம் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த இரு படங்களை ஓவர் டேக் செய்து அதிரடியாக வசூலை கடந்த வாரம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் குவித்து வருகிறது.

GHb907wboAAqaKy

கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு நண்பர்களுடன் செல்லும் ஒரு கூட்டம் சந்திக்கும் ஆபத்துகளும் அவர்கள் உயிர் பிழைத்தார்கள் இல்லையா என்கிற ட்விஸ்டுடன் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. கமல்ஹாசன் கண்டுபிடித்த குணா குகை தான் இந்த படம் உருவாக காரணம் என்பதால், கமல்ஹாசனை சந்திக்க கேரளாவில் இருந்து இயக்குனர் சிதம்பரம் தலைமையிலான படக்குழுவினர் இன்று சென்னை வந்தனர்.

உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து:

கமல்ஹாசன் மற்றும் அந்த படத்தை இயக்கிய சந்தானபாரதி இருவரையும் சந்தித்து ஆசி பெற்ற நிலையில் கமலஹாசனுடன் நிறுத்த புகைப்படங்களை இயக்குனர் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த படத்தை பார்த்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலினையும் படக்குழுவில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

GHb1QFTWQAAvqRE

மற்ற மொழிகள் குறித்தும் மற்ற மொழி படங்கள் குறித்தும் ரசிகர்கள் சண்டை போட்டாலும் நல்ல படங்கள் வந்தால் மொழிகளைக் கடந்து ரசிகர்கள் திரைப்படங்களைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக ஓடுவதே சாட்சி என்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...