கார், ஐபோன், தங்கம் பரிசுகள் என நம்பி ரூ.53 லட்சம் ஏமாந்த இளம்பெண்..! அதிர்ச்சி சம்பவம்..!

இளம்பெண் ஒருவர் விலை உயர்ந்த கார், ஐ போன் மற்றும் தங்க செயின்கள் பரிசாக கிடைக்கும் என நம்பி 53 லட்சம் ரூபாய் ஏமாந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் உங்களது இமெயிலுக்கு பரிசு பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அந்த பரிசு பொருளை டெலிவரி செய்ய மற்றும் வரிகளுக்கு மட்டும் சில தொகைகள் செலுத்த வேண்டும் என்றும் மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதனை நம்பி அந்த இளம் பெண் முதலில் முப்பதாயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன் பிறகு உங்களுக்கு மேலும் சில பரிசுகள் கிடைத்துள்ளது என்றும், குறிப்பாக விலை உயர்ந்த கார் உங்களுக்கு பரிசாக தரப்போகிறோம் என்றும் சொல்லி அதற்காக ஒரு தொகையையும் பெற்றுக் கொண்டனர்.

இதை போல் ஐபோன், பத்து சவரன் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் அடுத்தடுத்து தருவதாக சொல்லி பணத்தை ஜூன் 9ஆம் தேதியிலிருந்து ஜூன் 20ஆம் தேதி வரை படிப்படியாக பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 53 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற பிறகு அந்த இளம் பெண் இதற்கு மேல் பணம் அனுப்ப முடியாது, என்னுடைய பரிசு பொருட்களை அனுப்புங்கள் என்று கூறிய போது கடைசியாக ஒரு பெரும் தொகையை கேட்டதாகவும் இந்த தொகை கிடைத்த பிறகு வேறு எதுவும் தொகை கேட்க மாட்டோம், உங்களுடைய மொத்த பரிசு பொருட்களும் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும் என்றும் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.

னால் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்ததை எடுத்து தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறியபோது இது முழுக்க முழுக்க மோசடி என்று தெரியவந்தது. அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார், ஐபோன் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று நம்பி இளம் பெண் 53 லட்ச ரூபாய் ஏமாந்த சம்பவம் மங்களூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...