நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்.. ’லொள்ளு சபா’ மூலம் பிரபலமானவர்.. பிரபலங்கள் இரங்கல்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் சினிமா பிரபலங்கள் உதவ முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் சேஷு திடீரென உயிரிழந்தார்.

வறுமை வாடினாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல மனம் கொண்டவர் சேஷு என அவளுடன் லொள்ளு சபா குழுவில் இணைந்து பணியாற்றிய பல நகைச்சுவை நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

லொள்ளு சபா சேஷு காலமானார்

சமீபத்தில் லொள்ளு சபா குழுவினரை ஒன்றாக திரட்டி ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேஷு உடல்நலம் குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன்.ஜி ட்விட்டரில் பிரார்த்தனை செய்தார். லொள்ளு சபா ஜீவா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் அவருக்காக வேண்டி வந்த நிலையில் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுவிட்டார் சேஷு.

நாளை காலை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானத்துடன் இணைந்து ஏ1, பாரிஸ் ஜெயராஜ், குலுகுலு மற்றும் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

ரெட் கார்டுக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் சேஷு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பிரபலங்கள் எடப்பாளையம் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சேஷு. அதன் பின்னர் பல படங்கள், சின்னத்திரை தொடர்கள் என நடித்து காமெடி நடிகராக வலம் வந்த சேஷு உயிரிழந்தது நகைச்சுவை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...