“TRAIN டிக்கெட் எடுப்போம், ஆனால் போக மாட்டோம்! விநோத கிராமம் !

உத்திரபிரதேசம் பிரத்தியராஜில் தயார்பூர் என்ற ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் மாதம் 700 ரூபாய்க்கு TRAIN டிக்கெட் எடுக்கிறார்கள். ஆனால் அதில் பயணம் செய்வது இல்லை.

ஏனென்றால் இந்திய பிரதமராக இருந்த நேரு ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகுதூர் சாஸ்தியிடம் தயார்ப்பூரில் ஒரு ரயில்வே ஸ்டேஷனை அமைத்து தர கூறி வலியுறுத்தி உள்ளனர். அதன்படி 1954ஆம் ஆண்டு ரயில்வே ஸ்டேஷன் ஏற்படுத்தப்பட்டது.

ஏறத்தாழ 50 ஆண்டுகள் மேலாக அந்த ரயில் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் 2006ம் ஆண்டு அந்த ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளது. ஏனென்றால் குறைந்தபட்ச வருவாய் கூட அது ஈட்ட வில்லை என்பதுதான் இதற்க்கு காரணமாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் சில கோரிக்கைகளை வைத்தனர். அதன் பிறகு அங்குள்ள அதிகாரிகள் சில நிபந்தனைகளை மக்கள் முன் வைத்தனர். அதாவது குறைந்தபட்ச வருவாய் கூட ஒரு ரயில் நிலையம் ஈட்டவில்லை என்றால் அந்த ரயில்வே நிலையம் மூடப்படும் என தெளிவு படுத்தியுள்ளார்.

மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை – அடுத்த 5 நாட்களுக்கு மழை

அதனால் பிரான்ஸ் லைனில் 25 டிக்கெட்டுகளும் டிரேன்க் ரூட் லைன்களில் 50 டிக்கெட்டுகளும் குறைந்த பட்சம் பெற்றால் மட்டுமே இது செயல்படும் என்றும் கூறியுள்ளார்கள். இதனால் இந்த ஊர் மக்கள் ரயில் டிக்கெட் மட்டுமே வாங்கி வைக்கின்றனர். ஆனால் அதில் ஒருவர் கூட பயணம் செய்வதில்லை என்பது குறிப்பித்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...