மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை – அடுத்த 5 நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரும் சூரை காற்றுடன் பெய்த இந்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

பெருங்களத்தூரில் மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தன.

இதேபோல் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வாசல் அருகே அதிக அளவு மழை நீர் தேங்கியது. இதனால் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து பெரும்பாட்டு, நல்லூர், நெல்லிக்குப்பம் சாலை, ஊரப்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழைக் கொட்டி தீர்த்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கனமழை காரணமாக நூறு ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது. அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சின்னம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சின்னப்பழம் பகுதியில் நூறாண்டுகள் பழமையான புளியமரம் முறிந்து அருகே இருந்த மாட்டு கொட்டகை மீது விழுந்தது.

Modi திறக்கக்கூடாது – நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பான வழக்கு இன்று விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழைக் கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.