ரூ. 1 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு ரிட்டன்ஸ் கிடைக்கும் என்பதை காண்போமா…?

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவேளையில் வழங்குவதால் இந்த திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர். இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ. 1 லட்சத்தை பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை இதில் காணலாம் .

இந்தியன் வங்கியில், ரூ. 1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 6.50 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்குகிறது. இதனால் இரண்டு ஆண்டுகளில் உங்களது பணம் ரூ. 1.15 லட்சமாக திரும்ப கிடைக்கும்.

ஐ. சி. ஐ. சி. ஐ வங்கியில் இரண்டு வருடம் ரூ. 1 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்பவர்களுக்கு 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்குகிறது. மற்றொரு தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியிலும் இதே வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 1. 17 லட்சமாக திரும்ப பெறலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2 வருட முதலீடுகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்குகிறது. இதனால் ரூ. 1.16 லட்சமாக உயரும்.

கனரா வங்கியில் 6.85 சதவீதம் வட்டி விகிதங்கள் கிடைக்கும். இதனால் ரூ. 1 லட்சம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 1.15 லட்சமாக பெற்றுக் கொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 1 லட்சத்திற்கான வட்டி விகிதம் 6.80 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 1.15 லட்சமாக உங்கள் பணம் உயரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...