பான் இந்தியா ஸ்டார் ஆகும் விஜய்.. லியோ புது போஸ்டர் சும்மா தீயாய் தெறிக்குது!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஜய்யை எப்படியாவது வடக்கிலும் பெரிய ஸ்டாராக மாற்ற வேண்டும் என்றும் ஹிந்தி பெட்டிலும் வசூல் பெட்டியை நடத்த வேண்டும் என்பதிலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் குறியாக இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

பான் இந்தியா ஸ்டாராகும் விஜய்:

இந்நிலையில் லியோ திரைப்படம் பர்ஃபெக்ட் பான் இந்தியா திரைப்படமாக நடிகர் விஜய்க்கு அமையும் என்பது தெளிவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடத்தப்பட்ட நிலையில் அந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் 2 திரைப்படம் ஹிந்தியிலும் மிகப்பெரிய வசூல் ஈட்ட சஞ்சய் தத் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே பார்முலாவை தான் லியோ படத்திற்கு நடிகர் விஜய் பயன்படுத்தி உள்ளார் என்று கூறுகின்றனர்.

அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்:

லியோ படத்தின் இந்தி போஸ்டர் வெளியான நிலையில், தமிழ் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளை டார்கெட் செய்து லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஒரு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை திரைப்படமாக லியோ மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் 600 கோடி ரூபாய் வசூல் வேட்டையை விஜயின் லியோ திரைப்படம் முறியடிக்குமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை விஜய் நடித்துள்ள படங்கள் அதிகபட்சமாக 300 கோடி ரூபாயை வசூல் ஈட்டி வந்த நிலையில், 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டினால் விஜயின் மார்க்கெட் வேல்யூ டபுள் மடங்காக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ ஆடியோ லாஞ்ச்:

லியோ திரைப்படத்தின் செகண்ட்ஸ் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் வரும் 30-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு மிரட்டலான படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் மூலம் மற்றும் ஒரு பிரம்மிப்பூட்டும் ஆக்சன் படத்தை கொடுப்பார் என இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

ஜெயிலர், ஜவான் படங்கள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி தியேட்டர்களுக்கு ரசிகர்களை கொண்டு வந்ததைப் போலவே அடுத்த மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் லியோ திரைப்படமும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...