லெமன் டீயால் முகம் கழுவிப்பாருங்கள்! வித்தியாசத்தை உணருங்கள்!


5954337996ca510a8cc94118b2590b28

லெமன் டீ குடிப்பதால் முகப்பருக்கள் நெருங்காது.  டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும். முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச் செய்யும்.  முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கச் செய்யும். முகத்தில் வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கிவிடும். முகத்தை சுத்தமாக மாசு மருவின்றி இருக்க. இந்த லெமன் டீ அற்புதமாய் பலன் தரும்.  எண்ணெய் சருமம் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். காலை மாலை என இரு வேளையும் லெமன் டீயினால் முகம் கழுவினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம்.

d88c365350a8c7b1fd3f1db3d967d601

பற்களில் மஞ்சள் கறை படிந்திருந்தால், பல் விளக்கியதும், வாயில் சிறிது லெமன் டீயினால், ஒரு நிமிடம் வாய் கொப்பளியுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், எப்படிப்பட்ட மஞ்சள் கறையும் போய் விடும்.  முகத்திலுள்ள அழுக்குகளை நீக்க கடைகளில் வாங்கும் கிளென்சரைவிட மேலானது இந்த லெமன் டீ.

இது சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்.

064e4dec91ee8a724d7284564585756c

இனி லெமன் டீ செய்யும் முறை பார்க்கலாம்..

ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலை பொடியை போடுங்கள். நன்றாக கொதித்ததும், இறக்கி வடிகட்டுங்கள். அதனுள் எலுமிச்சை சாறினை பிழிந்தால், லெமன் டீ தயார். தேயிலை மற்றும் எலுமிச்சை குணங்களால் நம் சருமம் இன்னும் மெருகேறும். நீங்களும் வீட்டினில் முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...