மனு கொடுத்த ஊர் மக்கள்.. பத்தே நாளில் KPY பாலா செஞ்ச உதவி.. நீ மகராசனா இருக்கணும்யா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் மூலம் தமிழ் சினிமா வரைக்கும் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை முத்து, தங்கதுரை, புகழ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதில் மிக முக்கியமான ஒருவர் தான் KPY பாலா. மிகவும் மெலிதான உடம்புடன் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் களமிறங்கிய போது அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான ஒருவராக உருவெடுப்பார் என யாருமே கருதி இருக்க மாட்டார்கள்.

தனது டைமிங் கவுண்டர்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பாலா, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக களமிறங்கி இருந்தார். வரும் பிரபலங்களை தனது ஒன் லைன் மூலம் கலாய்த்து தள்ளிய பாலா, அதன் மூலம் அடைந்த உயரமும் மிகப்பெரிது. பல முறை பார்த்தாலும் கூட அவரது டைமிங் மற்றும் ரைமிங் வசனங்கள் மீண்டும் மீண்டும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டே தான் இருக்கும்.

மேலும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனக்கு கிடைத்த புகழை பயன்படுத்திக் கொண்ட பாலா, சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்தார். மிகவும் கஷ்டப்பட்டு இப்படி ஒரு உயரத்திற்கு வந்த பாலா, தற்போது செய்து வரும் உதவிகள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவரை ஒரு நிஜ ஹீரோவாகவே மாற்றி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் அதிக பங்கினை ஆதரவற்ற மக்களுக்காக கொடுத்து உதவி வருகிறார். ஒரு முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, மொத்தமாக 4 ஆம்புலன்ஸ் வாங்கி உதவி செய்துள்ளார். இதே போல மிக்ஜாம் புயலில் சிக்கிய சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு தன்னாலான உதவியையும் நேரடியாக போய் செய்து கொடுத்தார் பாலா.

இந்த நிலையில், மதுராந்தகம் மக்களுக்காக பாலா செய்த உதவி தொடர்பான செய்தி தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. மதுராந்தகம் அருகேயுள்ள கோட்டைக்கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், அங்கே சுகாதாரமற்ற குடிநீர் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதனால், அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அங்குள்ள மக்கள் பாலாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை புன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட KPY பாலா, 10 நாட்களில் அங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் திறந்து கொடுத்துள்ளார். இந்த உதவியால் அந்த ஊரே பாலா மீது அன்பை வாரி இறைக்க, நெட்டிசன்களும் பாலாவை மிகவும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

இப்படி தனக்கு கிடைக்கும் பணத்தில் மற்றவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும் KPY பாலா, பலரின் ஆசீர்வாதங்களோடு இன்னும் பல ஆண்டுகள் நல்ல பேரோடும், புகழோடும் நிச்சயம் இருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.