கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியில் உருவாகிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’… தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி…

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகராவார். 1964 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன இவர் தனது தனித்துவமான நையாண்டியான நகைச்சுவையால் மக்களை கவர்ந்தார். பின்னர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவைகள் மாபெரும் புகழைப் பெற்றது. அந்த நேரத்தில் இவர்கள் ஜோடி தான் எங்கள் படத்தின் நகைச்சுவைக்கு வேண்டும் என்று இயக்குனர்கள் போட்டி போட்டு வந்தனர். அந்த அளவிற்கு கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை பேசப்பட்டது.

இரண்டு தலைமுறைகளை தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்த கவுண்டமணியின் கொங்கு தமிழ் உரையாடல்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கவுண்டமணி தற்போது வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக சினிமாவில் இருந்து தள்ளி இருந்தார்.

இந்த நிலையில்,சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ கதையின் நாயகனாக காமெடி நடிகர் கவுண்டமணி நடித்து கம்பேக் கொடுக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் கவுண்டமணியுடன் யோகிபாபுவும் இணைந்திருக்கிறார். நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி என்பவர் நடித்துள்ளார்.

அரசியல் – நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடெக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள பரணி டப்பிங் ஸ்டுடியோவில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட நடிகர் கவுண்டமணி தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இவ்வளவு வயதாகியும் நடிகர் கவுண்டமணியின் கடமை உணர்ச்சியை அனைவரும் பாராட்டினர்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ராஜகோபால் கூறுகையில், இந்த படத்தின் கதையை நடிகர் கவுண்டமணியிடம் அவர்களிடம் சொன்ன போது மகிழ்ச்சியடைந்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் கவுண்டமணிக்கு யோகிபாபுவிற்கும் இடையே ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். பல வருட இடைவேளைக்குப் பிறகு நடிகர் கவுண்டமணியின் இந்த திரைப்படம் கண்டிப்பாக பேசப்படும் என்று தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews