தக் லைஃப் படத்தில் இத்தனை அவதாரம் எடுக்கப்போகிறாரா கமல்ஹாசன்?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதை தொடர்ந்து கமல்ஹாசன் பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணிரத்னமுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணிபுரிந்த நாயகன் திரைப்படம் காலம் கடந்து பேசப்படும் படமாக விளங்குகிறது. மணிரத்னம் தனது படத்தில் நடிக்கும் ஹீரோயினை காட்டுவது போல அவ்வளவு அழகாக யாராலும் காட்ட முடியாது என பலரும் பாராட்டியுள்ளனர். ரோஜா, திருடா திருடி, அலைபாயுதே, ராவணன், ஓ காதல் கண்மணி, கடைசியாக பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களை கொடுத்திருக்கிறார்.

தக் லைஃப்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் பல படங்களில் கமிட்டாகி நடிப்பதிலும், படங்களை தயாரிப்பதிலும் பிஸியாக இருந்துவருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்து, கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கதில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, அபிராமி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் கௌதம் கார்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் அரசியலில் சேர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். மேலும், தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதில் கவனம் செலுத்துக்கொண்டிருக்கும் அவர் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். மற்ற நடிகர்களின் போர்ஷனை முடித்துவிட மணிரத்னம் ப்ளான் செய்துள்ளார்.

கமல் அவதாரம்:

மேலும், தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து வருவதாகவும் அடுத்த லுக் சேஞ்சுக்கான கால அவகாசமாகவும் இது இருக்கும் என்று கூறுகின்றனர். நாயகன் படத்தில் அப்பா, மகன் என 2 கெட்டப்புகளில் நடித்த கமல், தற்போது 3 கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்கின்றனர்.  கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவின் படமும் சிவகார்த்திகேயன் படமும் உருவாகி வருகிறது.

மேலும், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இனிமேல் ஆல்பம் பாடல் வீடியோ வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...