பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கமல் நடிக்க வேண்டியதா?.. நல்லவேளை எஸ்கேப் ஆகிட்டாரு!..

சமீபத்தில் டிரெண்டாகி வரும் குணா படத்தில் நடித்திருந்த கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் வேண்டாம் என தவிர்த்த ஒரு படத்தில் சரத்குமார் நடித்திருப்பதாக கௌதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவரையும் இந்தனை ஆண்டுகள் கழித்தும் அனைவராலும் அறியப்படுகின்றனர். அவர்களின் மறைவுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அந்த இடத்தை நிலைநாட்டி வருகின்றனர். சிறந்த நடிகராக விளங்கும் கமல்ஹாசன் உலக நாயகன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தை நிராகரித்த கமல்:

நடிப்பில் மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார். இடையில் சில ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில் கம்பேக் கொடுக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் அமைந்தது. ஆக்ஷன் த்ரில்லரான அப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் இப்படம் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணிரத்னமுடன் இணைந்து கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் பணிபுரிந்து வருகிறார். கமலின் 234வது படமான இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையத்துள்ளார். அதை தொடர்ந்து அன்பறிவ் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் கௌதம் மேனன் அளித்திருந்த பேட்டியில், வேட்டையாடு விளையாடு என்னும் சூப்பர் டூப்பர் ஹீட் படத்தில் இணைந்து பணிபுரிந்த பிறகு என் திறமையை அறிந்த கமல்ஹாசன் அடுத்து ஒரு படம் பண்ணலாம் கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க என்றார். உடனே கொச்சியிலிருக்கும் கமல்ஹாசனை சந்தித்து அவருடன் விமானத்தில் பயணிக்கும் போதே கதை முழுவதையும் விளக்கியுள்ளார். கதை பிடித்திருந்தாலும் அது எனக்கு செட் ஆகாது என நிராகரித்து விட்டாராம்.

பிறகு மாதவன், ஆர்யா, சேரன் ஆகியோர்களிடம் சொல்லி கடைசியாக சரத்குமார் ஓப்புக்கொண்டார். அந்த படம் தான் பச்சைகிளி முத்துச்சரம் , இப்படம் அதிக வசூலை பெறவில்லை என்றாலும் அப்படத்தின் பாடல்களும் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா உள்ளிடோரின் நடிப்பும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...