சலாரை தொடர்ந்து பிரபாஸுக்கு சக்சஸ் கிடைத்ததா?.. கல்கி 2898 ஏடி படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி உள்ள கல்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

கல்கி விமர்சனம்:

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்றும் இயக்கிய நாக் அஸ்வின் 5 ஆண்டுகால உழைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி.

குருக்‌ஷேத்ர போரில் அஸ்வத்தாமவை கொல்லாமல் அவரது நெற்றியில் இருக்கும் சிரோன்மணியை பிடுங்கி விட்டு சாகாமல் பல மரணங்களையும் வருடங்களையும் கடந்து வாழ் என கிருஷ்ணர் சாபமிடுகிறார். சாபத்துக்கு பரிகாரம் கேட்கும் அஸ்வத்தாமாவுக்கு கலியுகத்தில் என்னை காப்பாற்றும் பொறுப்பு உனக்கு கிடைக்கும் என்கிறார்.

புராஜெக்ட் கே என சுப்ரீம் யஷ்கின் கமல்ஹாசன் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வரும் கருவின் சக்தியை உறிஞ்சி எடுத்துக் கொண்டு 800 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார். தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கருவையும் அப்படி எடுக்க முயற்சிக்கும் போது அவர் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.

அமிதாப் பச்சன் தீபிகா படுகோனுக்கு பாதுகாவலனாக நின்று காப்பாற்ற, தீபிகா படுகோனை பிடித்துக் கொடுத்தால் 5 மில்லியன் யூனிட்ஸ் தருவார்கள் என காசுக்கு ஆசைப்பட்டு பிரபாஸ் தீபிகா படுகோனை பிடிக்க தனது புஜ்ஜி வண்டியுடன் செல்கிறார்.

பிரபாஸ் அமிதாப் பச்சன் உடன் பல முறை மோதினாலும் அமிதாப் பச்சனை வீழ்த்தவே முடியவில்லை. கடைசியில் டிராமா செய்து யாஷ்கின் ஆட்களுக்கு தீபிகா படுகோனை காட்டிக் கொடுக்கிறார் பிரபாஸ். அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதை அடுத்த பாகத்தில் தான் பார்க்க வேண்டும்.

பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களுக்கு நிகராக டோலிவுட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் இந்த கல்கி. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ராஜமெளலி, ராம் கோபால் வர்மா என பலர் கேமியோக்களாக நடித்துள்ளனர்.

தியேட்டரில் மிஸ் செய்யக் கூடாத படமாகவே கல்கி 2898 ஏடி உருவாகி இருக்கிறது. தமிழ் டப்பிங், 3டி என அனைத்துமே சிறப்பாகவே உள்ளன.

கல்கி 2898 ஏடி: கலக்கல்

ரேட்டிங்: 4/5

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...