சிவாஜி கொடுத்த பாடம்.. பிரம்மாண்ட ஹீரோவை வைத்து படமெடுக்க தயங்கிய கே பாலச்சந்தர்!

இன்றைய தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களாக சங்கர், அட்லி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், சுதா கொங்காரா, நெல்சன் என பல இயக்குனர்கள் வெற்றி நடை போட்டு வந்தாலும் இயக்குனர் கே பாலச்சந்தரை யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறொரு கோணம் மற்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற முக்கியமான இயக்குனர்களில் கே பாலச்சந்தரும் ஒருவர். இவரின் ஒரு படம் கூட எதார்த்தத்தை மீறிய கதை அம்சத்தை கொண்டதாக இருக்காது. 1965 ஆம் ஆண்டு நீர்க்குமிழி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவரின் ஒவ்வொரு படத்தின் கதையும் அன்றாடமாக நம் வாழ்க்கையில் அல்லது நமது பக்கத்து வீட்டு, நெருங்கிய நண்பர்களின் வாழ்க்கையில் நடைபெறும் கதையை மையமாக வைத்து இவரின் அனைத்து திரைப்படமும் அமைந்திருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இன்றைய சினிமாவில் கொடி கட்டி பறக்கும் முன்னணி பெரிய ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் என இரண்டு பெரிய மகா ஹிட் ஹீரோக்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் கே பாலச்சந்தர் அவர்கள் தான். இப்படிப்பட்ட பல திறமைகளை தன்வசம் கொண்ட இயக்குனர் கே பாலச்சந்தர் மிகப்பெரிய பிரபலங்களை வைத்து படம் இயக்கவே இல்லை என சொன்னால் நம்மில் பலரால் நம்ப முடியாத உண்மையாக உள்ளது.

அன்றைய காலகட்டத்தில் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் முன்னணி பிரபலங்கள் யாரும் நடித்திருக்க மாட்டார்கள். இதற்கான காரணம் மிகப்பெரிய பிரமாண்டமான நடிகர் ஒருவரை வைத்து படம் எடுத்து அதனால் ஏற்பட்ட விளைவு தான் என்றும் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தர் பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்குவதை கைவிட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனர் பாலச்சந்தர் முதல் முதலாக பிரம்மாண்ட ஹீரோவான சிவாஜியை வைத்து ஒரு படம் எடுத்துள்ளார். 1970 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் எதிரொலி எனும் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நேர்மையான வழக்கறிஞராக நடிகர் திலகம் சிவாஜி நடித்திருப்பார். மேலும் இந்த படத்தின் கதைக்களம் வழக்கறிஞராக இருக்கும் சிவாஜிக்கு ஒரு ரயில் பயணத்தின் பொழுது மிகப்பெரிய பணப்பெட்டி ஒன்று கையில் கிடைக்கும். அதை தன்வசப்படுத்திக் கொண்ட சிவாஜியின் வாழ்க்கையில் பல நிம்மதிகள் தொலைந்து விடும். மேலும் இந்த பணத்தை யாராவது கேட்டு வந்து விடுவார்களோ என்ற பயத்திலேயே சிவாஜி வாழ்ந்து வருவார். இந்த படம் சிவாஜி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாக இருந்தாலும் நல்ல விமர்சனங்களை பெற தவறியது.

படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் நடிகர் சிவாஜி அவர்கள்தான். பிரம்மாண்ட ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் பொழுது அவரது ரசிகர்களின் பார்வை வேறு மாதிரியாக அமைந்திருக்கும். மாஸ் ஹீரோவாக பார்க்கப்பட்ட நடிகர் எதார்த்தமான கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடித்திருப்பது ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. ரசிகர்களை ஏமாற்றிய இந்த திரைப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தின் கசப்பான அனுபவத்தை புரிந்து கொண்ட இயக்குனர் பாலச்சந்தர் அதிலிருந்து தாம் உருவாக்கும் எதார்த்தமான கதை பிரம்மாண்ட நடிகர்களுக்கு பொருந்தாது என்பதே புரிந்து கொண்டு அந்த முறையை கைவிட்டு உள்ளார். அதிலிருந்து வேறு எந்த பிரபல நடிகரை வைத்தும் இயக்குனர் கே பாலச்சந்தர் படம் இயக்கியது இல்லை.

பத்தாவது இடத்திற்கு சென்ற அஜீத்! முதல் இடத்தை தட்டி பறித்த தளபதி விஜய்! காணாமல் சென்ற கமல்!

ரஜினி ,கமல் போன்ற நடிகர்களை வைத்து படம் எடுத்தாலும் காலப்போக்கில் அவர் மிகப் பிரமாண்ட உச்சியை தொட்டவுடன் அவர்களை வைத்து படம் எடுப்பதையும் பாலச்சந்தர் நிறுத்தியுள்ளார். இன்றைய காலத்தில் பிரம்மாண்ட மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹீரோக்களை வைத்து மட்டுமே படம் இயக்க ஆசைப்படும் இயக்குனர்களுக்கு மத்தியில் அந்த காலத்தில் பிரம்மாண்ட ஹீரோக்களை தவிர்த்த இயக்குனர் கே பாலச்சந்தர் சிகரமாக வாழ்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...