கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷியோ குஷியான அறிவிப்பு: இன்று ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம்!

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் நடைபெறுவதுதான் இந்தியன் பிரீமியர் லீக். இந்த ஐபிஎல்லில் ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகள் இடம் பெறும். ஆனால் 2022ஆம் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம்பெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இந்த ஐபிஎல்லில் களமிறங்கியுள்ளன. இதில் கேப்டன்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியின் சில வீரர்களை ஏலத்தில் இறக்காமல் தக்கவைத்து வரும். குறிப்பாக சென்னை அணியில் ஜடேஜா, பெங்களூர் அணியில் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை ஏலத்தில் நாம் காணமுடியாது.

இவ்வாறு உள்ள நிலையில் நடப்பாண்டிற்கான ஏலம் இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்குகிறது. வெளிநாட்டை சேர்ந்த 290 பேர் உள்ளிட்ட மொத்தம் 590 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.