கோலாகலமாக நடைபெற்ற ரோபோ சங்கரின் செல்ல மகள் திருமணம்.. சந்தோஷத்தில் இந்திரஜா சங்கர்!..

21வயதான இந்திரஜா சங்கரின் திருமணம் இன்று ரோபோ சங்கரின் சொந்த ஊரான மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.

இந்திரஜா சங்கர் திருமணம்:

நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தீபாவளி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான ரோபோ சங்கர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதை தொடர்ந்து, மாரி, புலி, கப்பல், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட அவருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் உள்ளார்.

Snapinsta.app 434245015 18430180384029875 4666274660848242629 n 1080

பிரியங்கா சங்கரும் பல விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். மேலும் குக் வித் கோமாலியில் பங்கேற்று பிரபலமானார். இந்நிலையில் தற்போது ரோபோ சங்கரின் உடல் நிலை குறைவால் மனம் உடைந்து போன பிரியங்கா தன் கணவனை கவனித்து மீட்டுக் கொண்டுவந்தார். இயற்கை உணவின் முக்கியத்துவத்தை அதற்கு பின்பு தான் தெரிந்துக் கொண்டதாகவும் அதையே தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும், தினமும் உடல் பயிற்சியில் ஈடுப்பட்டு பருமனாக இருந்த உடலை குறைத்தும் உள்ளார் ரோபோ சங்கர்.

இவர்களின் ஒரே மகளான இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்தி நடித்த விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சர்வைவர் நிகழ்சியில் பங்கேற்றார். அதையடுத்து பிகில் தீபாவளி, தமிழா தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்துக்கொண்டார்.

indraja

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்த நிலையில் பெரும்பாலானோரால் கலந்துக்கொள்ள இயலாததால் விரைவில் சென்னையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

களைகட்டிய மதுரை:

கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திரஜா சங்கருக்கும் அவரது சொந்த தாய் மாமனான கார்த்திக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பட்டு புடவையில் மற்றும் பட்டு சட்டையில் சும்மா பளப்பளன்னு மின்னும் மணமக்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்திரஜாவின் திருமணத்திற்கு சினிமா மற்றும் சீரியல் பிரபலங்கள் நேரில் வந்தும், இணையதளத்தின் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.