கூஸ்பம்ப்ஸைக் கிளப்பி விட்ட இந்தியன் 2 பர்ஸ்ட் சிங்கிள்… இவ்வளவு மேட்டர் இருக்கா?

இந்தியன் 2 ல் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் ‘பாரா’ என்ற பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்தப் பாடலுக்கான காட்சிகள் எப்படி எடுத்து இருப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்தப் பாரா பாடலில் ‘எம் தாய் மண் மேல் ஆணை… இது தமிழ் மானத்தின் சேனை’ என்ற வரிகள் தான் பாடலின் ஹைலைட்டாகப் பார்க்கப்படுகிறது.

இந்த பர்ஸ்ட் சிங்கிளில் கமல் வெள்ளையனை நோக்கி ஓராட்படையாக அதாவது ஒன் மேன் ஆர்மி, ஒத்தை ஆளாக நின்று ஜெயிக்கிறார். இது தமிழ் மானத்தின் சேனை இந்தியா என்று போகாமல் தமிழ் வீரனின் சுதந்திரப் போராட்ட வீரனின் தியாகத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

‘வெள்ளை ரத்தம் தொட்டு உன் வாளில் ஏற்று சாணை’ என்று சொல்லப்பட்டுள்ளது. இவரது உடைவாளுக்கு சாணை எப்படிப்பட்டது என்றால் வெள்ளையர்களின் ரத்தம் தொட்டு வாளில் சாணையாக ஏற்று என்கிறார்.

வெள்ளைக்கார நிலா நமக்குத் தேவையில்லை என்றும் காதலி சொல்வதாக பாடலில் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக நிலவைக் காதலிப்பதைப் பற்றித் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். அந்த வகையில் இதைப் புதுமையாக உருவகப்படுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய்.

‘ரத்தக்கறை கொண்ட உன் வாளின் முனைக்கு முத்தக்கறை வேணாமா’ துணைக்கு என்றும் பா.விஜய் எழுதியுள்ளார். ஷங்கர் – கமல் குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ்ல இந்தப் பட வேலையாக சென்று இருந்தார்களாம். இந்தப் பாடல் முழுவதும் அங்கு தான் தயாராகுதாம். இது ஒரு பிளாஷ்பேக் பாடலாகத் தான் இருக்கும். வீரசேகரசேனாபதியா, இல்லை அவரது தந்தையா என தெரியவில்லை.

Indian 2
Indian 2

இந்தப் பாடல் கிட்டத்தட்ட இந்தியன் படத்தில் வந்த ‘கப்பலேறிப் போயாச்சா’ சாயலில் உள்ளது. தற்போது வெளியான பாரா பாடல் அனிருத்துக்கு வேற லெவலைக் காட்டியுள்ளது. இந்தப் பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையைப் போல வெறித்தனமாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. துப்பாக்கி தப்பாய் கொண்ட சிப்பாய்க்கெல்லாம் சிம்மம் நீயே என்ற வரிகள் பாடலில் வரும்போது மியூசிக் வேற லெவலில் இருக்கிறது.

இந்தப் பாடலின் பெண் குரல் காஜல் அகர்வால் உடையது. படத்துக்காக அவர் ஜிம்முக்காகப் போய் உடலைத் தயார் செய்தாராம். சேனாபதி சுகன்யாவைத் திருமணம் செய்யும் முன் ஒரு மனைவி இருந்தாங்களாம். அவங்க தான் காஜல் அகர்வால். அவருக்கு ஒரு பையன் இருக்கானாம். அவன் திருப்பி வருவான் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளைக்காரர்களோட மிகப்பெரிய படையை ஒரே ஒரு தமிழ் வீரன் உடைவாளை வைத்துக்கொண்டு எதிர்க்கிறான் என்பதை சுட்டிக் காட்டுவது தான் இந்தப் பாடல்.

இதற்கான காட்சிகளை ஷங்கர் சார் பயங்கரமாக எடுத்து இருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்தப் பாடலில் வளைவான ஒரு அரிவாள் போன்ற ஆயுதம் உள்ளது. அதை கமல் கையில் வைத்துள்ளார். அதை வீசி எறிந்தால் குறி பார்த்து தாக்கும். குறிப்பாக கால்களைப் பதம் பார்க்கும். அந்த ஆயுதத்தின் பெயர் வளரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...