அனிருத்-ஐ என்னமோன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே.. இந்தியன் 2 பாரா பர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?

அது 1996-ம் வருடம். அதுவரை தமிழ் சினிமாவில் உச்ச பட்ச வசூலைப் பெற்ற திரைப்படமாக பாட்ஷா படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள். அவற்றை எல்லாம் அதற்கு அடுத்த வருடமே வெளிவந்த இந்தியன் படம் தவிடுபொடியாக்கி இதுவரை தமிழ்சினிமாவின் உச்சபட்ட வசூலைப் பெற்ற படமாக மாபெரும் வெற்றியடைந்து பாக்ஸ் ஆபிஸை நிரப்பியது இந்தியன்.

போதாக்குறைக்கு 3 தேசிய விருதுகள். இவை எல்லாம் உலகநாயகன் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், சுஜாதா ஆகியோர் இணைந்து செய்த மேஜிக். சேனாபதியாக இந்தியன் தாத்தாவாக கமல் இன்றும் 90 களில் பிறந்தவர்களின் மனதில் அழியாமல் நிற்கிறார்.

அதே உத்வேகத்துடன் 28 ஆண்டுகளைக் கடந்து நீண்ட நாள் ஷுட்டிங் என பல்வேறு இழுபறிக்குப்பின் ஒருவழியாக திரையில் வரத் தயாராகி இருக்கிறது இந்தியன் 2 திரைப்படம். முன்னர் படத்தில் இருந்த இருவர் இதில் இல்லை. ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். மற்றொருவர் சுஜாதா. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் இசை. கடந்த சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியான போது அனிருத் மீதான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. பழைய இந்தியன் படத்தினை ஏ.ஆர்.ரஹ்மான் இசை தாங்கிப் பிடித்திருக்கும். கேட்டாலே புல்லரிக்க வைக்கும். இதில் அந்தச் சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் சப்பென்று இருப்பதாக அனிருத் மீதான அதிருப்தி உண்டானது.

நடிகர் கார்த்தியை சினிமாவுக்குள் இழுத்த ஹாலிவுட் படம்.. உதவி இயக்குநர் to ஹீரோ ஆனது இப்படித்தான்

ஆனால் அப்படியில்லை. இதைக் கேளுங்கள் என்று நிரூபிப்பது போல் அமைந்திருக்கிறது இன்று வெளியான இந்தியன் 2 பாரா பாடல். முற்றிலும் இரைச்சல் இல்லாத, குறிப்பாக ஆங்கிலக் கலப்பு இல்லாத தூய தமிழ் வரிகளுக்கு அனிருத் தனது இசையாலும், குரலாலும் உயிர் கொடுத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஃபீல் வரவில்லை என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு “எம் தாய் மண்மேல் ஆணை , இது தமிழ் மானத்தின் சேனை..” என பா.விஜய்யின் வரிகளுக்கு துடிப்புடன் கூடிய இசையைக் கொடுத்து பழைய இந்தியன் படத்தை ஞாபகப்படுத்துகிறார் அனிருத்.

ஆனால் பாடலில் உலகநாயகன் இடம்பெறவில்லை என்பது தான் மைனஸ். விடுதலைப் போரும், துப்பாக்கியும், வாளும் தான் பாடலில் அதிகம் இடம் பெறுகிறது. கடைசியாக தேசியக் கொடி பறக்கும் காட்சிகளில் இந்தியன் பட பிளாஷ்பேக் காட்சிகளை நினைவூட்டுகிறது. இருப்பினும் கப்பலேறிப் போயாச்சு பாடலில் வரும் ஒருவித தேசிய உணர்வு இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னவோ சற்றே வர மறுக்கிறது.

“தொட்டுப்பார் கை நடுங்கும்.. மூச்சடங்கும் இவனைக் கண்டு..” என்ற வரிகள் கமலின் புகழைப் போற்றுவது போல் அமைந்திருக்கிறது. இவ்வாறாக பழைய இந்தியன் படத்திற்கு எந்தக் குறையும் வைக்காமல் சற்றே அதிருப்தியைப் போக்கும் வண்ணம் அனிருத் இசை இந்தியன் 2-ல் அதிர வைக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews