ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்.. மத்திய அரசு அதிரடி..!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தற்போது ஒவ்வொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தனித்தனியான சார்ஜர்கள் இருக்கும் நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்னொரு ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் லேப்டாப்புகள், டேப்லெட்டுகளும் தனித்தனி சார்ஜர்கள் பயன்படுத்த வேண்டி இருப்பதால் இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து அனைத்து நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே வகையான சார்ஜர் பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் யுஎஸ்பி சி டைப் சார்ஜர் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசு தந்துள்ளதாகவும் அதற்குள் அனைத்து நிறுவனங்களும் தங்களது மொபைல் போனுக்கு யுஎஸ்பி சி டைப் சார்ஜரை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண போன்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விதி அமலுக்கு வந்தால் யுஎஸ்பி சி டைப் சார்ஜர் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் அமையும் என்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் மொபைல் போனுக்கு தனித்தனியாக சார்ஜர் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே இது குறித்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டுக்குள் அனைத்து சார்ஜர்களையும் யுஎஸ்பி சி டைப் ஆக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற விதிகள் செயல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இதே போன்ற மாற்றங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. யுஎஸ்பி டைப் சி சார்ஜர் அனைத்து மொபைல் மொபைல்களுக்கும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு பயனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...