இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி; அட்டவணையில் மாற்றம்! காரணம் என்ன?

தென்னாப்பிரிக்கா உடன் ஏற்பட்ட தோல்விக்குப் பின்பு இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறது. அதன் விளைவாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கத்தியப் தீவுகள் அணியினை 3 க்கு 0 என்ற கணக்கில் 50 ஓவர் போட்டிக்கான தொடரை இந்திய அணி வென்றது.

இதனால் இந்திய அணி மீண்டும் தனது பழைய நிலைமைக்கு மாறியுள்ளதாக காணப்படுகிறது. இவ்வாறுள்ள நிலையில் அடுத்த வாரம் இந்தியாவுக்கு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது இதில் திடீரென்று அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் அடுத்த வாரம் 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடரில் அட்டவணையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

டி20 கிரிக்கெட் தொடர் வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி லக்னோவில் அடுத்த இரண்டு போட்டிகள் தர்மசாலாவில் நடைபெறுகிறது. அதனை போல் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 25 இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் டி20 போட்டியும் மார்ச் 13ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.