சொந்தப் படத்தில் வெறித்தனமாக வேலை செய்த இளையராஜா.. இப்படி ஒரு பெர்பெக்ட்-ஆ?

இசைஞானி இளையராஜாவை நமக்கெல்லாம் ஒரு இசையமைப்பாளராக மட்டுமே தான் தெரியும். ஆனால் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படம் தான் ஆனந்தக் கும்மி. 1983-ல் வெளியான இப்படத்தினை தனது மனைவி  ஜீவா பெயரில் இளையராஜா தயாரித்திருந்தார்.

இப்படத்தில் பாலச்சந்தர், அஸ்வினி, கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்தனர். வழக்கம் போல் பாடல்களை வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தனர். இசைக் கோர்ப்பையும் இளையராஜாவே கவனித்துக்  கொள்ள பாலகிருஷ்ணன் என்பவர் இத்திரைப்படத்தினை இயக்கினார்.

மற்ற படங்களுக்கே தரமாக  மெட்டமைக்கும் இளையராஜா தனது சொந்தப் படத்திற்கு சும்மா விடுவாரா. சற்று அதிக சிரத்தை எடுத்து இப்படத்திற்காக 11 பாடல்களைக் கொடுத்தார். அதில் ‘ஆனந்தக்கும்மி..‘ ‘ஒரு கிளி உருகுது..‘ ‘ஓ வெண்ணிலாவே..‘ போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

இந்தப் படத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இளையராஜா வழக்கமாக தன் இசைக்குழுவினரோடு இசையமைக்காமல் ஆர்டி பர்மன் ஆர்கஸ்ட்ரேஷன் இசைக் கலைஞர்களைக் கொண்டு மும்பையில் ரிக்கார்டிங் செய்தார்.

அப்போது அங்குள்ள இசைக்கலைஞர்களுக்கு சம்பளம் மணி நேரக் கணக்குதான். மேலும் இரவு நேரங்களைத் தாண்டினால் சம்பளம் இரட்டிப்பாகும். மேலும் இதனாலலேயே வேலையை இழுத்தடித்துச் செய்வார்களாம். இதனை உணர்ந்திருந்த இளையராஜா முதலிலேயே பாடல்கள் பதிவிற்கான மொத்த நோட்ஸ்களையும் தயார் செய்து வைத்திருந்தாராம்.

தாலி எடுத்துக் கொடுத்த கண்ணதாசன்.. நடிகர் திலகத்தின் திருமண சுவாரஸ்யங்கள்..

அதன்பின் ஒரு சில மணிநேரங்களிலேயே மொத்த பாடல் பதிவையும் முடித்துவிட்டராம். இளையராஜாவின் இந்த வேகத்தைக் கண்ட ஆர்டி பர்மன் ஆர்கஸ்ட்ரேஷன் கலைஞர்கள் வாயடைத்துப் போய்விட்டார்களாம்.

மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் என்னசார் இது.. ! உங்க ஆளு.. இவ்வளவு வேகமாக மொத்த ரெக்கார்டிங்கையும் முடிச்சிட்டாரே.. இவ்வளவு பஞ்சுவலா இருந்தா நாங்கெல்லாம் எப்படி பிழைக்கிறது என்று பொருமியிருக்கின்றனர்.

ஒரு  இசையமைப்பளார் தன் வாழ்நாட்களில் 1000+ படங்களுக்கு இசையமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. ஒரு படத்திற்கான பாடல் பதிவு, மற்றும் பின்னணி இசை போன்றவற்றை இன்று முடிக்க ஒருமாதத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளும் இசையமைப்பளார்கள் மத்தியில் ஒரு நாளைக்கு 3 படங்களுக்கு மேல் பணிபுரிந்து அத்தனையும் ஹிட் கொடுத்து இசைஞானி என்னும் அசைக்க முடியா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews