ஒரே மெட்டில் இளையராஜா செய்த புதுமை.. இந்தப் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?

சினிமா இசை உலகில் எம்.எஸ்.வி-க்கு அடுத்த படியாக இளையராஜா செய்த புதுமைகள் ஏராளம். ஒவ்வொரு பாடல் பிறந்த கதையைக் கேட்டோம் என்றால் ஒரு சினிமா படமே எடுக்கலாம். அந்த அளவிற்கு தான் இசையைமைக்கும் ஒவ்வொரு பாடலிலும் இளையராஜாவிடம் மெனக்கெடல் இருக்கும்.

மற்றொன்று சரஸ்வதி அவருக்கு அளித்த வரம். இன்று ஒரு படத்திற்கு இசையமைக்க மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும் வேளையில் ஒரே நாளில் ஒட்டுமொத்த படத்திற்கான ரெக்கார்டிங்கையும் முடித்து விடுவார்.

இப்போது கணினி சாஃப்ட்வேர்கள் என்னதான் இசையை அமைத்துக் கொடுத்தாலும் ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி நோட்ஸ் எழுதி அதை இன்றளவும் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் இளையராஜா. எந்தப் பாடலுக்கு எப்படி இசை வரவேண்டும், இசைக்கலைஞர்கள் எப்படி வாசிக்க வேண்டும் என தனித்தனி நோட்ஸ் எழுதி கொடுத்துவிடுவாராம் இளையராஜா. இந்த நோட்ஸ்களைப் பார்த்தாலே இசையமைக்கும் பணி மிகச் சுலபமாக முடிந்து விடுமாம் இளையராஜாவுக்கு.

வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்த காமெடி நடிகரின் பரிதாப நிலை.. உதவி கேட்டு உருக்கமான வீடியோ பதிவு!

இப்படி இளையராஜா செய்த புதுமைகளில் பிறந்த பாடல் தான் புதிய வார்ப்புகள் படத்தில் இடம்பெற்ற தம்தானனம் தானா.. பாடல். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கே.பாக்யராஜ் ஹீரோவாக அறிமுகமான முதல் படம்.

1979-ல் வெளியான இப்படத்தில் முத்தான பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. இதில் தம்தானனம் தானா பாடல் ஒரே நீண்ட சரணத்திலும், அடுத்து வரும் பல்லவியிலும் மெட்டு மாறாமல் அதே தொணியில் பாடப்பட்டிருக்கும்.

ஒருமுறை இளையராஜா சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரே சரணத்தில் அமைந்த மிகக் குறுகிய பாடல் ஒன்றைக் கேட்டாராம். அதன்படி தானும் அதேபோன்றதொரு நீண்ட மெட்டை அமைக்க விரும்பி இயற்றிய மெட்டுதான் புதிய வார்ப்புகள் தம்தானனம் தானா பாடல். ஒரே நீண்ட சரணத்தில் அமைந்த இப்பாடலுக்கு கங்கை அமரன் வரிகள் எழுதியிருப்பார். இப்பாடலை ஜென்சி மற்றும் வசந்தா ஆகியோர் பாடியிருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...