HP நிறுவனம் மேம்படுத்தப்பட்ட AI வசதிகளுடன் பிரத்யேகமாக கேமர்ஸ் மற்றும் கன்டென்ட் கிரியேடர்ஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது…

பர்சனல் கணினி உற்பத்தியாளரான HP இந்தியாவில் கேமர்ஸ் மற்றும் கன்டென்ட் கிரியேடர்ஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு AI மேம்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் ஓமன் டிரான்ஸ்சென்ட் 14 மற்றும் ஹெச்பி என்வி x360 14 ஆகும். இவை இரண்டும் இன்டெல் கோர் அல்ட்ரா செயலிகளுடன் கூடிய உயர்நிலை கேமிங் மற்றும் பயனர்களுக்கு கிரியேஷன் அனுபவத்தை வழங்க உதவுகின்றன என்று HP இந்தியாவின் நுகர்வோர் பிசியின் வகை மேலாளர் டி.கணேஷ் தெரிவித்தார்.

ஓமன் டிரான்சென்ட் 14 என்பது ஹெச்பியின் முதல் AI-மேம்படுத்தப்பட்ட ஓமன் லேப்டாப் ஆகும். சிறந்த கேமிங் அனுபவத்திற்காக இது AI-மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. கேமிங் மற்றும் கன்டென்ட் கிரியேஷன் ஆகிய இரண்டிலும் ஈடுபடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Omen Transcend 14 ஆனது NVIDIA GeForce RTX 4060 கிராபிக்ஸ் உடன் வருகிறது, இது மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் AI அம்சங்களால் துரிதப்படுத்திய விளையாட்டு அனுபவத்தை தருகிறது.

அடோப் ஃபோட்டோஷாப் போன்ற செயலிகளுடன் உயர்நிலை உருவாக்கும் அனுபவத்தை எளிதாக்க இந்த சாதனங்களில் இன்டெல் கோர் அல்ட்ரா செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று மேலாளர் கணேஷ் கூறினார். மடிக்கணினிகள் நரம்பியல் செயலாக்க அலகுடன் (NPU ) வருகின்றன, இது தடையற்ற கிரியேஷன் மற்றும் ப்ரொடெக்ஷனுக்காக 65 சதவீதம் பேட்டரி ஆப்டிமைசேஷனுக்கு உதவுகிறது.

புதிய என்வி x360 14 என்பது ஹெச்பியின் விசைப்பலகையில் மைக்ரோசாஃப்ட் கோபைலட் பட்டனைக் கொண்டுள்ள முதல் லேப்டாப் ஆகும், இது அசிஸ்டெட் சேர்ச், கன்டென்ட் கிரியேஷன் மற்றும் பலவற்றை உருவாக்கக்கூடிய AI அம்சங்களை செயல்படுத்துகிறது எனவும் HP Envy x360 14 ஆனது HP வேர்ல்ட் ஸ்டோர்ஸ் மற்றும் HP ஆன்லைன் ஸ்டோர்களில் Meteor Silver மற்றும் Atmospheric Blue என இரண்டு வண்ணங்களில் ₹99,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது மற்றும் HP Omen Transcend 14 ஆனது ₹1,74,999 ஆரம்ப விலையில் செராமிக் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது என மேலாளர் கணேஷ் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
HP