மாதம் ரூ. 20,000 சம்பளத்தில் எவ்வாறு சேமிக்கலாம்…? உங்களுக்கான பண சேமிப்பு டிப்ஸ் இதோ…

நீங்கள் தனியார் வேலையில் இருந்தாலும் சரி, அரசு வேலையில் இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் தெரியுமா? சேமிப்பதற்கான சம்பளம் என்னவாக இருக்க வேண்டும்? சம்பளத்திற்கும் சேமிப்பிற்கும் என்ன சம்பந்தம்? இது குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

உண்மையில், உங்களால் சம்பளம் மற்றும் சேமிப்பிற்கு இடையில் சமநிலையை பராமரிக்க முடியாவிட்டால், உங்கள் நிதி இலக்குகளை அடைவதை நீங்கள் இழக்க நேரிடும். நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. அவர்களிடம் சேமிப்பு பற்றி பேசும் போதெல்லாம், அவர்களின் சம்பளம் இப்போது குறைவு என்றும், அது கொஞ்சம் கூடும் போது முதலீடு செய்வார்கள் என்றும் ஒரு சுலபமான சாக்கு சொல்லுவார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களின் சம்பளம் கூடும் போது செலவுகளும் கூடி, பிறகு அவர்களால் எதையும் சேமிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இப்போது என்ன தீர்வு என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் விரும்பினால், உங்கள் சம்பளத்தில் எவ்வளவு சேமித்து வைக்க முடியுமோ, அதைச் சேமிக்கலாம் என்பது எளிமையான பதில். இதற்கு மன உறுதியும் சிறந்த திட்டமிடலும் மட்டுமே தேவை. உங்கள் சம்பளம் மாதம் 20,000 ரூபாயாக இருந்தாலும், உங்களால் சேமிக்க முடியும். முதலில், சம்பளம் வந்தவுடன், சேமிப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்பதுதான் ஃபார்முலா. இரண்டாவது கணக்கு இல்லை என்றால், சேமிப்பிற்காக ஒதுக்கப்பட்ட தொகையை நீங்கள் தொடமாட்டீர்கள் என்று முடிவு செய்யுங்கள். அந்தத் தொகையை மாதத்தின் முதல் வாரத்திலேயே முதலீடு செய்யுங்கள்.

நீங்கள் சேமிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்றால், சம்பளத்தில் 10 சதவீதத்தில் இருந்து தொடங்குங்கள், முதல் 6 மாதங்களுக்கு மாதம் ரூ.2000 சேமிக்கவும்.நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும், அதை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அது எதிர்காலத்தில் பெரிய நிதியாக மாறும் மற்றும் சிக்களன சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய நிதியாண்டிலிருந்து நீங்கள் சேமிப்பைத் தொடங்கினால், 10% இல் தொடங்குங்கள், ஆனால் 30% மாதாந்திர சேமிப்பை அடையும் வரை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அதை அதிகரிக்கவும். ஆரம்ப நிலையில் நிறைய பிரச்சனைகள் வரும், சம்பளம் முழுவதையும் செலவழிக்கும் பழக்கம் ஏற்கனவே வந்துவிட்டதால் சற்று சிரமமாக இருக்கும். ஆனால் 6 மாதங்களில் உங்கள் பழக்கத்தை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். முதலில் செலவுகளின் பட்டியலை உருவாக்கவும். முதலில் தேவையானவற்றுக்கு இடம் கொடுங்கள், பின்னர் தேவையற்ற செலவுகளைக் கவனியுங்கள். அதாவது கழித்தல் செய்யலாம்.

மாதம் 4 முறை வெளியில் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை மாதத்திற்கு 2 முறை என்று குறைக்கவும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் நீங்கள் தேவையில்லாமல் செலவழிக்கும் தேவையற்ற செலவுகளின் பட்டியலை உருவாக்கவும். ஏனென்றால் ஒவ்வொரு நபரும் தனது சம்பளத்தில் 10 சதவீதத்தை தேவையில்லாமல் செலவிடுகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தவிர, இந்த ஆன்லைன் யுகத்தில், உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள். உங்களிடம் பல கிரெடிட் கார்டுகள் இருந்தால், அவற்றில் சிலவற்றை உடனடியாக மூடவும். இது தவிர, ஆன்லைன் ஷாப்பிங்கைத் தவிர்க்கவும். நீங்கள் ஷாப்பிங்கிற்கு வெளியே செல்லும் போதெல்லாம், வீட்டை விட்டு வெளியேறும் முன் ஒரு பட்டியலை உருவாக்கவும். இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சம்பளம் கிடைத்தவுடன், சலுகைகள் காரணமாகவோ அல்லது தேவையில்லாமல் உங்களுக்குப் பயன்படாத பொருட்களை வாங்காதீர்கள். இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை சேமிக்க முடியும்.

இது தவிர ரெக்கரிங் டெபாசிட் அல்லது தங்க பத்திரத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். சம்பளம் அதிகரிக்கும் போதெல்லாம், அதற்கேற்ப முதலீட்டுத் தொகையை அதிகரித்துக் கொண்டே இருங்கள். இந்த ஃபார்முலா மூலம் 10 வருடங்கள் சேமித்து முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதில்லை. இக்கட்டான நேரத்திலும் இந்த நிதி உதவியாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...