விஜய்யின் அடுத்த படம் குறித்து மாஸான அறிவிப்பு வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்! மீண்டும் இணையுமா அந்த கூட்டணி?

தென்னிந்திய திரையுலகில் அசைக்க முடியாத உச்சம் தொட்ட பிரபல நடிகராக நடிகர் விஜய் உயர்ந்துள்ளார். இவரின் படங்களை கொண்டாட கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே ஆவலுடன் காத்து வருகின்றனர். விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படம் ஒரு பாண் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் இணைந்து நடித்துள்ளனர். பல வருடத்திற்கு பிறகு இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.

தளபதி விஜய் லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது, விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் விஜய் சென்னை திரும்பியதும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை இசையமைப்பார் ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நடித்த அடியே படத்தின் புரொமோஷனுக்காக பல பேட்டிகள் அளித்து வருகிறார்.

அதில் ஜி.வி பிரகாஷ்யிடம் தளபதி விஜய்யுடன் இணைந்து தலைவா, தெறி படங்களை தொடர்ந்து மீண்டும் இணையாதது ஏன் கேள்வி கேட்க்கப்பட்டுள்ளது. அதற்கு ஜி.வி பிரகாஷ் தன்னை இசையமைப்பாளராக பயன்படுத்தும் இயக்குனருடன் விஜய் அவர்கள் அடுத்து படம் நடிக்க வில்லை என கூறினார்.

அதவாது ராஜா ராணி படத்தில் நானும் அட்லீயும் இணைந்திருந்ததால் அடுத்ததாக தெறி படத்தின் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தலைவா படத்திற்கு முன்னதாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் வரும் படங்களுக்கு நான் தான் இசையமைப்பது வழக்கம். அப்படி தான் தலைவா பட வாய்ப்பும் கிடைத்தது என ஜி.வி பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்காரா இருவரும் நடிகர் விஜய் வைத்து படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு இயக்குனர்களின் அடுத்தடுத்த பட கமிட்மெண்ட்களால் விஜய்யுடன் இணைய முடியவில்லை. இந்த இரண்டு இயக்குனர்கள் விஜய் வைத்து படம் எடுத்தால் அப்போது அந்த படத்திற்கு கண்டிப்பாக நான் தான் இசையமைப்பதாக ஜி.வி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இரண்டு நாளோ.. மூன்று நாளோ.. ஓடினால் போதும்.. இறுதியில் கமல் – ரஜினிக்கு செம டஃப் கொடுத்த டி. ராஜேந்திரன்!

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் விஜய்யுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக அவரே பல இடங்களில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இயக்குனர் சுதா கொங்காரா படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் புது தகவலை வெளியிட்டுள்ளார்.

சுதா கொங்காரா அவர்கள் சிறந்த இயக்குனர், சூரரை போற்று படத்திற்கு சமீபத்தில் அவருக்கு நேஷனல் அவார்டு கிடைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா கூட்டணி இணைந்து உருவாகும் படத்தில் விஜய்யின் தரமான நடிப்பு மற்றும் சில அவார்டுகளை வாங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...