கால்பந்து மைதானத்தின் நடுவில் ஏற்பட்ட 100 அடி பள்ளம்.. என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் உள்ள கால்பந்து மைதானத்தின் நடுவில் திடீரென 100 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய் என்ற மாகாணத்தின் தெற்கு பகுதியில் புகழ்பெற்ற கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது என்பதும் இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இந்த கால்பந்து மைதானத்தின் நடுவில் 100 அடி அகலம் மற்றும் 50 அடி ஆழம் கொண்ட பள்ளம் திடீரென தோன்றியுள்ளதை அடுத்து கால்பந்து மைதான நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த மைதானம் அருகே சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றதாகவும் அதன் காரணமாக தான் மைதானத்தின் நடுவில் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவம் நடந்த போது போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மைதானத்தை மேற்பார்வையிடும் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறிய போது ’திடீரென ஏற்பட்ட பள்ளத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம், சினிமாவில் பார்ப்பது போல் இருந்தது, உண்மையாகவே அந்த பள்ளத்தை பார்க்கும்போது மிகவும் பயங்கரமாக இருந்தது, இதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்

தற்போது அந்த மைதானம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில இடங்களில் பள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மைதான நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...