இத்தனை வருடம் கழித்தும் கூட மக்கள் அதை ரசிக்கிறாங்க, இதை விட சந்தோஷம் வேற எதுவும் இல்லை… வித்யாசாகர் பகிர்வு…

மெல்லிசை மன்னர் என்ற செல்லப்பெயரை கொண்டவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் மற்றும் பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர் வித்யாசாகர். சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். தனது 14 வயது முதலே இசையமைப்பாளர்கள் எம். எஸ். வி, இளையராஜா அவர்களிடம் பணியாற்றியவர்.

1989 ஆம் ஆண்டு ‘பூமனம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் பணியாற்றியவர். 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படம் வித்யாசாகர் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

அதை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் நடித்த படங்களான ‘கர்ணா’, ‘செங்கோட்டை’, ‘ஆயுத பூஜை’, ‘சுபாஷ்’, ‘தாயின் மணிக்கொடி’ ஆகியவற்றிற்கு தொடர்ச்சியாக இசையமைத்தார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.

2000 களின் தொடக்கத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன், ஷாம் என அனைவரின் படங்களுக்கும் இசையமைத்தார். 2004 ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் புகழடைந்தார். ஏனென்றால், ‘கில்லி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இன்று ‘கில்லி’ திரைப்படம் தியேடரில் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது. மக்கள் படத்தை பார்த்து வித்யாசாகரின் இசையை புகழ்ந்து பேசி வருகின்றனர். மக்களின் ஆரவாரத்தைப் பற்றி இசையமைப்பாளர் வித்யாசாகர் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழித்த பின்பும், மக்கள் எனது இசையை ரசிக்கிறாங்க என்னும் பொழுது இதை விட வேறு சந்தோஷம் இல்லை என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews