டபுள் மீனிங் வசனங்களின் நாயகன் சொன்ன நெத்தியடி பதில்.. விமர்சனர்கள் வாயடைக்க வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தி

அந்தக் காலச் சினிமாவில் காமெடிகள் என்றாலே யாரையும் இழிவு படுத்தாது, அடுத்தவரை உருவ கேலி செய்யாமல் சிரிக்கவும் வைப்பர், சிந்திக்கவும் வைத்தனர் என்.எஸ்.கே., நாகேஷ் போன்ற காமெடி நடிகர்கள். ஆனால் கவுண்டமணியின் வருகைக்குப்பின்னர் காமெடியின் போக்கே மாறியது. செந்திலை அந்தத் தலையா, இந்தத் தலையா என்றும் பேசி உருவ கேலி காமெடிக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதை தமிழ் சினிமா இரசிகர்கள் விரும்பவே இன்றுவரை அந்த பாணியே தொடர்கிறது.

ஆனால் இந்த காமெடி நடிகர்களைத் தவிர்த்து இரட்டை அர்த்த வசனங்களில் பேசி வயிற்றைப் பதம் பார்த்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஆரம்பத்தில் பல படங்களில் இரண்டாம் நாயகன், வில்லன், குணச்சித்திரம் என நடித்து பின்னர் காமெடி வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார். தன்னுடைய காமெடிகளில் இரட்டை அர்த்த வசனங்களை பிரதானமாக்கி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர்மேல் விழுந்தது.

ஒருமுறை கூட நேரில் பார்த்திராத இயக்குருக்கு வாரி வழங்கிய எஸ்.எஸ்.வாசன்.. இதுக்குப் பின்னால இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவமா?

ஆனால் இவற்றிற்கு பதில் கொடுத்த வெண்ணிற ஆடை மூர்த்தி, “ “தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார். “எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க” என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா’ இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் “சின்னவீடு” என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு’ என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.” இவ்வாறு கூறி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

இருந்தபோதிலும் இவர் பேசும் வசனங்களில் அவ்வப்போது இரட்டை அர்த்த வசனங்கள் தலை தூக்கி.. நிற்பது நிஜமே..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.