2024 எனக்கு நல்ல ஆண்டு… ஏனென்றால் இந்த இரண்டு லெஜெண்ட்களுடன் நடிக்கிறேன்… அபிராமி பகிர்வு…

கேரளாவில் பிறந்த திவ்யா கோபிகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட அபிராமி, திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் ரியாலிட்டி ஷோ நடுவர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

அபிராமி கல்லூரியில் படிக்கும் போது ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிக பிரபலமான நிகழ்ச்சியான ‘டாப் டென்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது.

2001 ஆம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘வானவில்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் வெற்றிப் பெற்றது. அடுத்து பிரபுக்கு ஜோடியாக ‘மிடில் கிளாஸ் மாதவன்’, சரத்குமாருக்கு ஜோடியாக ‘சமுத்திரம்’ படத்தில் நடித்தார். நல்ல விமர்சனங்களைப் பெற்ற இப்படங்களின் மூலம் பிரபலமானார் அபிராமி.

அடுத்ததாக கமலஹாசனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று அபிராமிக்கு திருப்புமுனையாகவும் அவரது கேரியரில் முக்கியமான படமாகவும் இடம்பிடித்தது. ‘சமஸ்தானம்’, ’36 வயதினிலே’, ‘மாறா’, ‘சுல்தான்’ போன்ற படங்கள் அபிராமி நடித்தவைகளில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.பிறகு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அபிராமி. குடும்ப பாங்கான முகத்துகாக ரசிகர்களைக் கொண்டவர் அபிராமி.

தற்போது, அடுத்து தான் நடிக்கும் படங்களைப் பற்றி பேசியுள்ளார் அபிராமி. அவர் கூறியது என்னவென்றால், 2024 ஆம் ஆண்டு எனக்கு மிகவும் நல்ல வருடம், ஏனென்றால் நான் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இந்த இரண்டு லெஜெண்ட்களுடன் நடிக்கிறேன் மற்றும் 20 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதுஎன்று பகிர்ந்துள்ளார் அபிராமி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...