கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?

கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ? 15 ஆயிரம் ரூபாய் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஏமாற்றி உள்ளது.

கோவையில் ஒவ்வொரு வருடமும் யாராவது ஒருவர் நிதிமோசடி செய்து ஓடுவது நடக்கிறது. ஏலச்சீட்டு தொடங்கி ஆப் மூலம் நிதிகளை மோசடி செய்வது வரை நடக்கிறது. அந்த வகையில் கோவையில் புதிதாக ஒரு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மைதின் மற்றும் ஃபரிதா ஆகிய இருவர் கோவையை மையமாகக் கொண்டு ஜிஎம்ஆர் குரூப் என்ற நிறுவனம் செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஆப்பில் முதலீடு செய்வதுடன், கொடுக்கப்படும் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் ஈட்டலாம் கவர்ச்சி வாக்குறுதிகளை கூறியுள்ளார்களாம்.

முதலில் குறைவாக கட்டிய பணத்திற்கு நல்ல லாபத்துடன் திருப்பி தந்துள்ளார்கள். அதன்பின்னர் அதிகமாக பணம் போட்டால் இதைவிட அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய மக்கள், கூடுதல் பணத்தை முதலீடு செய்துள்ளனர். முதலில் பணம் கட்டியவர்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அதிக பணம் வந்தாக காட்டி இருக்கிறார்கள். அவர்களும் நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் கம்பெனி கம்பி நீட்டிவிட்டது.

இந்நிலையில் கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த ஜுபேரியா என்பவர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், “15 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் தினமும் 540 ரூபாய் பணம் சம்பாதிக்கலாம் என்று எங்களிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை பணம் எங்களுக்கு வந்தது. பின்னர், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் கூடுதலாக பணம் முதலீடு செய்யுமாறு ஆசையை தூண்டினார்கள்.

இதனால் முதலீடு செய்தோம். கடன் பெற்றும், தாலி உட்பட தங்க நகைகளை அடகு வைத்தும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தோம். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட நாங்கள் அதில் இருந்து பணம் சம்பாதிக்கவே இல்லை. இது குறித்து அந்த நிறுவனத்திடம் நாங்கள் கேட்ட போது, ஆப்பை அப்டேட் செய்தாக சொல்லி ஏமாற்றினார்கள் . ஒரு கட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவது தெரியவந்தது.

தற்போது அவர்களது வங்கிக் கணக்கு முடங்கிவிட்டது. முழுமையாக நிறுவனத்தை நிறுத்தி விட்டார்கள். கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். அவர்களிடம் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆசை வார்த்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்” என்றார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...