1,000 னு எழுதுறதுக்கு பதிலா 1 K-னு ஏன் சொல்றாங்க தெரியுமா.. பலருக்கும் தெரியாத வரலாற்று பின்னணி..

எப்போதுமே சமூக வலைத்தளங்களிலும் சரி, நமது நண்பர்களிடம் பேசும் போதும் சரி, ஆயிரம் ரூபாய் என்பதையோ அல்லது ஆயிரம் என்ற எண்ணையோ குறிப்பிடும் போது K என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். உதாரணத்திற்கு 1,000 என சொல்வதற்கு 1K என்றும், 10,000 என்றால் 10K என்றும் குறிப்பிடுவோம்.

ஆனால், பில்லியன் என்ற வார்த்தையை குறிப்பிடும் போது அதன் ஆங்கிலத்தில் முதல் எழுத்தான B என்ற எழுத்தையும், மில்லியன் என சொல்லும் போது M என்ற எழுத்தையும் குறிப்பிடுவோம். இப்படி அவைகள் பொருத்தமாக இருந்தாலும் ஆயிரத்திற்கு நாம் குறிப்பிடும் போது K என சொல்வது ஏன் என பலருக்கும் நிச்சயம் தோன்றி இருக்கலாம்.

அதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். முந்தைய காலத்தில் எல்லாம் மேற்கத்திய நாடுகள் பலவும் கிரேக் மற்றும் ரோமன் ஆகிய நாடுகளின் கலாச்சாரத்தை தான் அடிப்படையாகக் கொண்டு நிறைய விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி கிரேக்கத்திய மொழியில் ‘Chilioi’ என்றால் ஆயிரம் என்று அர்த்தம் இருந்து வந்துள்ளது. பின்னாளில் இந்த கிரேக் வார்த்தையான Chilioi தான் பிரெஞ்சு நாட்டவர்களால் ‘கிலோ’ என பின்னர் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிலோ மீட்டர், கிலோ கிராம் என பல அளவீடுகள் வரையறுக்கப்பட்டு வந்த சூழலில் கிலோ என்பதற்கு K என்ற எழுத்தும் குறியீடாக அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இப்படி Chilioi என்ற கிரேக்க வார்த்தையின் பின்னணியில் இந்த ஆயிரத்திற்கு ஒரு வியப்பான தொடர்பு உடைய சூழலில் கணிதத்தின் படி மற்றொரு சுவாரஸ்ய கனெக்சனும் இதற்கு உள்ளது. அதாவது ஆயிரம் என்ற எண்ணை கணிதத்தின் குறியீடுகளின் படி ‘K’ என்று குறிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

அதாவது 1 K என்பது ஆயிரத்திற்கு சமமாக இருந்துள்ளது. மேலும் இந்த K என்ற வார்த்தை, ஆயிரத்திற்கு பயன்படுத்த மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. மில்லியன், பில்லியன் ஆகியவற்றிற்கு பின்னால் வரும் ட்ரில்லியன் என்ற எண் கணக்கிற்கு ‘T’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரத்திற்கும் அதே T என்ற எழுத்தை பயன்படுத்தினால் நிச்சயம் குழப்பம் ஏற்படும் என்பதற்காக தான் கணிதம் மற்றும் கிரேக்க மொழியின் வரலாறு படி அதற்காக K என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த காலத்து இளைஞர்கள் பலரும் K என குறிப்பிடுவதன் காரணம், ஏதோ ட்ரெண்டிங்காக இருப்பதாக கருதும் நிலையில், இப்படி ஒரு வரலாறு இருப்பது நிச்சயம் பலரையும் அசர வைக்க தான் செய்யும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews