இயக்குனர் ஆர்.வி உதயகுமார் – ப்ளாஷ்பேக்

எண்பதுகளின் கடைசியில் தமிழ்த்திரையின் ஒரு வரவாக வந்தவர்தான் இந்த ஆர்.வி உதயகுமார் திரைப்படக்கல்லூரி மாணவர் இவர்.

1456b0458d7be7ff21b9e72a8c7620ee

முதல் படமே வித்தியாசமான கதையாக அமைந்தது. மனோஜ் கியான் இசையில் உரிமை கீதம் படம் இவரது முதல் படம். வித்தியாசமான கதைக்களம்.

தொடர்ந்து சிவாஜி, சத்யராஜ் நடிப்பில் புதிய வானம் படத்தை இயக்கினார். படம் சுமார்தான். எம்.ஜி.ஆர் கொடுத்த உடற்பயிற்சிகருவிகளை இப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக சத்யராஜ் கூறுவார். எதிர்பார்த்த வெற்றியில்லை.

சிவக்குமார், பிரபு நடிப்பில் உறுதிமொழி என்றொரு திரைப்படம் எடுத்தார். இசைஞானியின் இசையில் அதிகாலை நிலவே, அன்புக்கதை வம்புக்கதை என்று பாடல்கள் ஹிட் ஆன லெவலுக்கு படம் ஹிட் ஆகவில்லை.

இந்த நேரத்தில் வந்த கிழக்கு வாசல் படமே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அருமையாக இருந்ததால் படம் வெற்றிப்படமானது.

குறிப்பாக இசைஞானி குரலில் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் பாடல் பல வீடுகளில் 90களில் ஒலித்த வெற்றிப்பாடல். பிறகு இவர் இயக்கிய சின்னக்கவுண்டர் படமே பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்து கதைகள் படங்களுக்கு அடித்தளமிட்டது. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை மிகப்பெரும் பக்கபலமானது. சின்னக்கவுண்டர் திரைப்படம் மெகா வெற்றிப்படமானது.

தமிழ் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இவர் இணைந்தார். முன்னணி இயக்குனர் ஆனதால் முன்னணி நடிகர்கள், படாதிபதிகள் பார்வை இவர் மேல் விழ ஆரம்பித்தது. ரஜினிகாந்துக்காக இவர் தயார் செய்த கலெக்டர் கெட்டபில் ரஜினிகாந்த் தோன்ற இருந்த ஜில்லா கலெக்டர் திரைப்படம் சுவர் விளம்பரங்களில் மட்டுமே பார்க்க முடிந்து ட்ராப் ஆனது.

அதே கால்ஷீட்டில் ரஜினி நடித்த படம்தான் ஏ.வி.எம் தயாரிப்பில் வந்த எஜமான். ரஜினிகாந்த் நடித்த படமாதலால் பாடல்கள் நன்றாக இருந்ததால் வெற்றிபெற்றது இப்படம்.

நடிகை செளந்தர்யா, கார்த்திக் நடிப்பில் பொன்னுமணி திரைப்படமும் சுமார்தான். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபுவின் 100வது படமான ராஜகுமாரன் படத்தை இயக்கும் வாய்ப்பு இவரை தேடிவந்தது.

கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தி வந்த இவர் வெற்றி இயக்குனராக ஆன பிறகு கமலை வைத்து வயிறுகுலுங்க சிரிக்க வைக்க சிங்காரவேலன் படத்தை கொடுத்தார்.

இவரதுமனைவி சுஜாதா உதயகுமார் கதை எழுதுவதில் வல்லவர். அவரை தனது சின்னக்கவுண்டர், எஜமான் படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். 80, 90களில் புகழில் இருந்த ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த், சிவக்குமார் என முன்னணி நடிகர்கள் அனைவரையும் இயக்கிய பெருமைக்குரியவர் இவர்.

ஜெயராமும் இவரும் அண்ணன் தம்பியாக நடித்த சின்ன ராமசாமி பெரியசாமி, கார்த்திக்கை வைத்து இயக்கவிருந்த உலகை விலை பேசவா படங்களும் ட்ராப் ஆனது.

வெற்றிப்பட மன்னன் போலவே ட்ராப் படங்களின் மன்னனும் இவர்தான். ஜில்லா கலெக்டர், உலகை விலை பேசவா மற்றும் சின்னராமசாமி பெரியராமசாமி என 3 ட்ராப் படங்களின் சொந்தக்காரர் இவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews