பொங்கல் பண்டிகையின் முன்னோடி எது தெரியுமா?!


87a890347e15ad5a0c0f75e016222ab4

பொங்கல் பண்டிகை கி.மு. 200 – கி.மு. 300 காலக்கட்டத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தைந்நீராடலின்போது சங்ககால பெண்கள் ‘பாவை நோன்பு’ன்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர்.

பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) பொங்கல் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாக இருந்து வந்தூள்ளது. தமிழ் மாதமான மார்கழியின் (டிசம்பர் – ஜனவரி)போது இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம்பெண்கள் விரதமிருந்து வேண்டுவர்.

பாவைநோன்பு இருக்கும் பெண்கள் மார்கழி மாதம் முழுக்க பால் மற்றும் பால்பொருட்களை சாப்பிடமாட்டாங்க. தங்கள் முடிக்கு எண்ணெடுவது, கண்ணுக்கு மையிடுவது, மருதாணி மாதிரியான அழகுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

கடுமையான சொற்களை பேசாம, காலையில் குளிச்சுமுடிச்சு, ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணின்ற பெண் தெய்வத்தின் சிலையை அந்த காலத்துல வணங்கி வந்ததா குறிப்புகள் சொல்கிறது.

தைமாத முதல்நாள் தங்கள் நோன்பை முடிச்சுப்பாங்க. நல்ல கணவன் அமையவும், நெற்பயிர்கள், பயிர்கள் செழிக்க தேவையான மழையை கொண்டு வருவதற்காகவுமே இந்த நோன்பு உண்டானது. பழமை வாய்ந்த இந்த மரபுகளும், சடங்குகளும்தான் படிப்படியா மாறி இன்னிக்கு பொங்கல் பண்டிகையா மாறி இருக்கிறது.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.