பொய்யான நெய்தீபம்

 

நெய்தீபம்ன்னு சொல்லி கோவில்களில் விற்கப்படும் தீபங்களில் உண்மையிலேயே நெய்யினால் ஆனதில்லை. 100ம்.லி 60க்கு விற்கும் நெய், 10ரூபாய்க்கு 3 நெய்தீபம் எப்படி கொடுக்க முடியும்ன்னு என்னிக்காவது நாம் யோசித்திருப்போமா?!

பசுநெய்யினால் தீபம் ஏற்றும்போது, தீபச்சுடர் ஒரே சீராக வெள்ளை நிறத்தில் விரும்பத்தக்கதான வாசனையோடு இருக்கும். அந்த ஒளியில் காற்று சுத்தமாகி தூய்மாயான சுவாசக்காற்றான ஆக்சிஜன் கிடைக்கும். ஆனால், நாம் கோவிலில் ஏற்றும் தீபத்தினை கவனியுங்கள். அடர்மஞ்சளில் ஒழுங்கற்ற வடிவில் தீபச்சுடர் இருக்கும். அதுமட்டுமில்லாம, அந்த இடமே ஒருமாதிரியான காந்தல் வாசனை வரும். ஏகப்பட்ட தீபம் ஏத்துவதால் இப்படி வாசனை வருதுன்னு இதுக்கும் ஒரு காரணம் சொல்வாங்க. அதுமட்டுமில்லாம, வெயில்காலங்களில்கூட இந்த தீபத்திலிருக்கும் நெய் உருகாது. தூய்மையான நெய் வெயில்காலங்களில் வெளியில் வைத்திருந்தாலே உருகும்.

ஹோட்டல்களில் பலமுறை பயன்படுத்தி மீந்துபோன எண்ணெயோடு மரவள்ளிக்கிழங்கு மாவு, பசையை சேர்த்து சூடாக்கி அதை நெய்ன்ற பேரில் இப்படி வியாபாரம் நடக்குது. கோவில்களில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலிருந்தே அதற்கு தேவையான நெய், திரி, தீப்பெட்டி என அனைத்தையும் எடுத்துச் சென்று தீபம் ஏற்றுங்கள். இல்லையேல் பூ ஒரு முழம் வாங்கி கடவுளுக்கு அர்ப்பணிப்பணியுங்கள்/ அதுவும் முடியவில்லையென்றால் தூய மனதுடன் அவன் பாதம் பணிவதே எல்லா துன்பத்துக்கும் தீர்வாய் அமையும். அதைவிட்டு பரிகாரம் அது இதுன்னு இறங்கி காசை வீணாக்கி உடல் அலைச்சலுக்கும் இப்படி போலியான தீபமேற்றி கோவிலை பாழ்படுத்தாதீங்க.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.